»   »  வந்துட்டேன்னு சொல்லு.. இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கிலும் அதிகாரப்பூர்வ பக்கம் தொடங்கிய ரஜினி!

வந்துட்டேன்னு சொல்லு.. இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கிலும் அதிகாரப்பூர்வ பக்கம் தொடங்கிய ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் ரஜினி!- வீடியோ

சென்னை: ரஜினிகாந்த் நேரடி அரசியல் என்ட்ரிக்கு தயாராகி வருகிறார். தனது அரசியல் கட்சியை விரைவில் தொடங்கவிருக்கிறார் ரஜினி.

இந்நிலையில், ட்விட்டரில் மட்டும் இருந்து வந்த ரஜினி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வ பக்கங்களைத் தொடங்கியுள்ளார்.

புதிதாக கணக்கைத் துவங்கியிருக்கும் ரஜினிகாந்துக்கு பின்தொடர்பாளர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

ட்விட்டர் பக்கம்

ட்விட்டர் பக்கம்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார். அந்தப் பக்கத்தில் தொடர்ச்சியாக தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார். ஆரம்பத்தில் திரைப்படம், நண்பர்களுக்கு வாழ்த்துகள் என பதிவுகள் செய்துவந்த ரஜினி, தற்போது தீவிர அரசியல் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.

அரசியல் கட்சி

அரசியல் கட்சி

விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார் ரஜினி. இதனால் ட்விட்டரில் ரஜினியை பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ட்விட்டரில் 4.58 மில்லியன் பேர் ரஜினியை பின் தொடர்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் கணக்கு

இந்நிலையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில், தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளார் ரஜினி. இன்ஸ்டாகிராமில் 'கபாலி' படத்தின் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, 'வணக்கம் வந்துட்டேன்னு சொல்லு' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஃபாலோயர்ஸ் குறைவு

ஃபேஸ்புக் பக்கத்தில் 'வணக்கம்' என்று பதிவிட்டு தொடங்கியுள்ளார். குறுகிய நேரத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் பெற்றிருக்கிறது அவரது பக்கம். இன்ஸ்டாகிராமில் இன்னும் இருபதாயிரம் ஃபாலோயர்களை எட்டவில்லை.

English summary
Rajinikanth enters Instagram and facebook social networks officially.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil