»   »  என்னது மகேஷ் பாபு சூப்பர் ஸ்டாரா? அது எப்படிப் போடலாம்?- ரஜினி ரசிகர்கள் காட்டம்

என்னது மகேஷ் பாபு சூப்பர் ஸ்டாரா? அது எப்படிப் போடலாம்?- ரஜினி ரசிகர்கள் காட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் என்ற இந்தப் பட்டப் பெயர் இளம் நடிகர்களைப் படுத்தும் பாடு கொஞ்சமல்ல. அவரவருக்கென்று ஒன்றுக்கு நான்கு பட்டப்பெயர் வைத்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் என்று அடுத்தவருக்கு சூட்டப்பட்டு, அவர் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே அந்தப் பெயர் தங்களுக்கும் கிடைக்காதா என ஏங்குகின்றனர்.

அந்த லிஸ்டில் இப்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் சேர்ந்துவிட்டார் போலிருக்கிறது.

Rajini fans angry on Mahesh Babu

மகேஷ்பாபு நடித்து தெலுங்கில் வெளியாகியிருக்கும் படம் ஸ்ரீமந்துடு. செல்வந்தன் என்ற பெயரில் தமிழ்நாட்டிலும் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

தொடர் தோல்விகளால் நிச்சயம் ஹிட் கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் மகேஷ்பாபு, படம் வெளியாகும் இறுதி நேரத்தில் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டார். இதற்காக இருமுறை சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

தமிழில் வெளியான செல்வந்தன் படத்தின் டைட்டிலில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு என்று போட்டிருக்கிறார்கள். இதனால் ரஜினி ரசிகர்கள் கடுப்பாகி, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்குப் பட உலகில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் பல பட்டப்பெயர்கள் உள்ளன. ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எந்த மொழி சினிமாவிலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை மகேஷ் பாபு எப்படிப் பயன்படுத்தலாம் என்று ரஜினி ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய சினிமாவைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிக்கு மட்டும் தான். வேறு யாரும் அதைப் பயன்படுத்துவது அநாகரீகம் என்று ரஜினி ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Rajini fans have showed their agitation against Telugu actor Mahesh Babu for using Superstar title.
Please Wait while comments are loading...