»   »  நாளைய முதல்வரே வாழ்க, அரசியலுக்கு வா தலைவா: கோடம்பாக்கத்தை அதிர வைத்த ரஜினி ஃபேன்ஸ்

நாளைய முதல்வரே வாழ்க, அரசியலுக்கு வா தலைவா: கோடம்பாக்கத்தை அதிர வைத்த ரஜினி ஃபேன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியை பார்க்கும் ஆசையில் ராகவேந்திரா மண்டபம் முன்பு குவிந்த ரசிகர்கள் நாளைய முதல்வரே, அரசியலுக்கு வா தலைவா என்று கோஷமிட்டனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து 9 ஆண்டுகளாகிவிட்டது. இதையடுத்து ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.

அவர் வரும் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

ஆலோசனை

ஆலோசனை

ரஜினி தனது ரசிகர்களை சந்திக்கும் நிலையில் மாவட்ட ரஜினிமன்ற நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

ரஜினி

ரஜினி

ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்திற்கு ரஜினி வருவார் என்று நினைத்து 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபம் முன்பு குவிந்தனர். நாளைய முதல்வரே வாழ்க, அரசியலுக்கு வா தலைவா என்று அவர்கள் கோஷமிட்டனர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

கோஷமிட்ட ரசிகர்கள் திருமண மண்டபத்திற்குள் சென்ற பிறகு தான் இன்று ரஜினி அங்கு வர மாட்டார் என்பது அவர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

சந்திப்பு

சந்திப்பு

ரஜினி வரும் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை தினமும் ஏராளமான ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்பதை ரஜினி ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajinikanth fans assembled before Raghavendra kalayana mantapa on sunday expecting to have a glimpse of their thalaivar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil