twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் காலமானார்..ரஜினி வெளியிட்ட உருக்கமான இரங்கல்!

    |

    சென்னை : ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருக்கமான இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    வி.எம்.சுதாகர் சிறுநீரக புற்றுநோய் காரணமாக கடந்த ஓராண்டாகவே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

    அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ரஜினி ரசிகர்கள் மன்றத்தலைவர் வி.எம்.சுதாகர் காலமானார்..அஞ்சலி செலுத்த வருவாரா சூப்பர்ஸ்டார்?ரஜினி ரசிகர்கள் மன்றத்தலைவர் வி.எம்.சுதாகர் காலமானார்..அஞ்சலி செலுத்த வருவாரா சூப்பர்ஸ்டார்?

    வி.எம். சுதாகர்

    வி.எம். சுதாகர்

    ரஜினிகாந்த் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி வி.எம். சுதாகர். 71வயதான இவர் ரஜினியின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கத்தை கவனித்து வந்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கில் ரஜினி கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வி.எம். சுதாகர் காலமானார்

    வி.எம். சுதாகர் காலமானார்

    இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியாக இருந்தவர் வி.எம். சுதாகர். இவர் நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு வட சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

    அருமை நண்பர்

    அருமை நண்பர்

    இந்நிலையில், அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் அவர்களின் மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

    முற்றிலும் போலியானது

    முற்றிலும் போலியானது

    ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி சுதாகர் உடல்நிலை மோசமாக இருந்த போது, நடிகர் ரஜினிகாந்த் எந்தவிதமான நிதியுதவி செய்யவில்லை என்று இணையதளத்தில் செய்திகள் பரவியது. கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தலைவர் எனக்கு உதவவில்லை என்ற செய்தி முற்றிலும் போலியானது. உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் ரஜினிகாந்த என அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Read more about: rajinikanth passed away
    English summary
    Rajini Fans Association Head Sudhakar passed away Rajnikanth condolence in twitter
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X