»   »  சாதனை மேல் சாதனை... கபாலி டீசரைக் கொண்டாடும் ரசிகர்கள்

சாதனை மேல் சாதனை... கபாலி டீசரைக் கொண்டாடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மே 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தில் வெளியாகி சாதனை மேல் சாதனைப் படைத்து வரும் ரஜினியின் கபாலி டீசரை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் செய்யாத அளவுக்கு 15 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது ரஜினியின் கபாலி.

Rajini fans celebrates Kabali teaser success

தமிழ்ப் படம், தென்னிந்தியப் படம், இந்தியப் படம் என்ற லெவல் தாண்டி, உலகளவில் ஹாலிவுட் படங்களின் சாதனையையும் முறியடித்துக் கொண்டுள்ளது இந்தப் படம். வெளியான 7 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதுதான் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இத்தனைக்கும் ரஜினிகாந்த் இந்த டீசரை தனிப்பட்ட முறையில் எங்கும் புரமோட் செய்யவில்லை. 3 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட தனது ட்விட்டர் பக்கத்தில் கூடப் பகிரவில்லை. அவர் ட்விட்டரில் இணைந்தபோது, தன் படங்களை புரமோட் செய்யவே இணைகிறார் என்று சிலர் குற்றம் சாட்டியது நினைவிருக்கலாம்.

ஆனால் எந்த புரமோஷனும், விளம்பரமும் இல்லாமல், ஒரு தமிழ் படம் உலகளவில், வெளிநாட்டு விமர்சகர்களால் வியந்து பேசப்படுகிறது என்றால் அது கபாலிதான்.

உலகளவில் அதிக விருப்பங்கள் வெற்ற மூன்றாவது படமாக ஒரு பிராந்திய மொழிப் படத்தின் டீசர் திகழ்கிறதென்றால் அது தமிழ்ப் படமான கபாலியின் டீசர்தான்.

இந்திய அளவில் அதிக பார்வைகள் கொண்ட, அதுவும் இத்தனை சீக்கிரம் இவ்வளவு பார்வைகள் பெற்ற முதல் படமும் கபாலிதான்.

இந்த சாதனைகளை ரஜினி ரசிகர்கள் மாவட்ட வாரியாக கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

சென்னையில் ஆல்பட் தியேட்டரில் இன்று ஏராளமான ரசிகர்கள் கேக் வெட்டி கபாலி டீசரைக் கொண்டாடினர். இதே போல நெல்லை, திருச்சி, மதுரையில் உள்ள ரசிகர்களும் இனிப்பு வழங்கி, கபாலி டீசரின் 15 மில்லியன் சாதனையைக் கொண்டாடினர்.

English summary
Thousands of Rajini fans are celebrating the extraordinary success of Rajinikanth's Kabali teaser.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil