twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோச்சடையான் வெற்றிக்காக ராமேஸ்வரம் கோயிலில் ரசிகர்கள் நடத்திய 1008 சங்கு பூஜை!

    By Shankar
    |

    ரஜினியின் 'கோச்சடையான் படம் வெற்றி பெற ராமேஸ்வரம் கோயிலில் 1008 சங்கு பூஜை நடத்தினர் அவரது தீவிர ரசிகர்கள்.

    வருகிற 9-ந் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது கோச்சடையான். இந்தப் படம் வெற்றி பெற ரஜினி ரசிகர்கள் பல்வேறு வழிபாடுகள், பூஜைகளை நடத்தி வருகின்றனர்.

    திருமலையில்

    திருமலையில்

    கோச்சடையானுக்காக வேலூர் மாவட்ட ரசிகர்கள் திருப்பதி திருமலைக்கு நடந்தே சென்று ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்தனர்.

    பாபா குகை

    பாபா குகை

    தலைவரின் முரட்டு பக்தர்கள் என்ற தலைப்பில் இயங்கும் ரசிகர்கள் சிலர் இமயமலைக்கு பயணம் செய்து, ஆபத்துகள் நிறைந்த காட்டில் நடந்து போய் பாபா குகையில் பிராத்தனை செய்தனர்.

    திருப்பூரில்

    திருப்பூரில்

    கோச்சடையான் வெற்றிக்காக திருப்பூரில் பிரமாண்ட முளைப்பாரி ஊர்வலமும் நடத்தினர். ரஜினி உடல்நலமில்லாமல் இருந்த போதும் இப்படி முளைப்பாரி எடுத்து வேண்டினர்.

    ராமேஸ்வரம் ரசிகர்கள்

    ராமேஸ்வரம் ரசிகர்கள்

    இப்போது ராமேஸ்வரம் கோவிலில் ரஜினி ரசிகர்கள் 1008 சங்கு பூஜை நடத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் பாலநமச்சி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சங்கு வழிபாடு

    சங்கு வழிபாடு

    கோவிலில் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. இது குறித்து பாலநமச்சி கூறும் போது, "ரஜினி உடல் நலம் குன்றி இருந்த போது அவர் நலம் பெற வேண்டி ராமேஸ்வரம் கோவிலில் 3 - ம் பிரகாரத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடத்தினோம்.

    அன்னதானம்

    அன்னதானம்

    தற்போது கோச்சடையான் வெற்றி பெற சங்கு பூஜை நடத்தி உள்ளோம். படம் வெற்றி பெற்றதும், ராமேஸ்வரம் கோவில் ஏர்வாடி, தர்கா, சர்ச்களில் 10 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கப்படும்.

    விரைவில் ராமேஸ்வரம் தீர்த்தத்தை ஊர்வலமாக எடுத்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் கொடுப்போம்," என்றார்.

    English summary
    Ramanathapuram Rajini fans have performed 1008 sangu pooja at Rameshwaram temple for the success of Kochadaiiyaan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X