»   »  'காலா' ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிகளின் டிக்கெட் விற்பனை அமோகம்!

'காலா' ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிகளின் டிக்கெட் விற்பனை அமோகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
காலாக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைச்சிடுச்சி! ரிலீஸ்க்கு தயார்.

திருவனந்தபுரம் : சூப்பர்ஸ்டார் ரஜினியின் 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா ஸ்ட்ரைக் காரணமாக 'காலா' ரிலீஸ் தள்ளிப் போகலாம் எனக் கூறப்பட்டதும் படத் தயாரிப்பு நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கேரளாவில் 'காலா' ரசிகர் மன்றக் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறதாம்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினியின் 'காலா' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கரமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. உலகம் முழுவதுமிருக்கும் ரஜினி ரசிகர்கள் 'காலா' ரிலீஸுக்காக காத்திருக்கிறார்கள். 'காலா' டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

ஸ்ட்ரைக்

ஸ்ட்ரைக்

தமிழகத்தில் சினிமா ஸ்ட்ரைக் நடைபெற்று வரும் நிலையில், வெகு விரைவில் ஸ்ட்ரைக் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் காலா ரிலீஸில் எந்த பிரச்னையும் இருக்காது. ஒருவேளை முடியாவிட்டால் படம் மற்ற இடங்களில் வருவதும் சந்தேகம் தான்.

ஸ்பெஷல் ஷோ

இந்நிலையில், கேரளாவில் ரஜினி ரசிகர்கள் 'காலா' படத்தின் ரசிகர் மன்ற காட்சிகளை நடத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஏப்ரல் 27-ம் தேதி அதிகாலை 4 மணி ரசிகர் மன்ற காட்சிக்கு 300 ரூபாய் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

செம வரவேற்பு

கேரளாவில் ரிலீஸ் ஆனாலும் தமிழில்தான் ரிலீஸாகும். தமிழகத்தில் ரிலீஸ் ஆகாமல் 'தலைவா' படம் போல மற்ற மாநிலங்களில் ரிலீஸானால், ரசிகர்கள் கேரளா சென்று காலாவை பார்க்க தயாராகி வருகிறார்கள். இன்னும் ஒரு சில நாட்களில் கேரள தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Superstar Rajini's 'kaala' will be released on April 27th. In this case, Kerala rajini fans club selling tickets for 'kaala'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X