»   »  ரஜினி, கபாலி வெற்றிக்காக சோளிங்கரில் நடந்த சிறப்புப் பிரார்த்தனை!

ரஜினி, கபாலி வெற்றிக்காக சோளிங்கரில் நடந்த சிறப்புப் பிரார்த்தனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இது தேவையா? போய் பிள்ளை குட்டிகளைப் படிக்க வைங்க என்று ஆளாளுக்கு கமெண்ட் அடித்தாலும் அசராத ரஜினி ரசிகர்கள் அடிக்கடி ஏதாவது தடாலடியாகச் செய்வார்கள்.

இப்போது ஒரு சிறப்புப் பிரார்த்தனையை நடத்தியுள்ளனர் சோளிங்கர் நகரில்.

வதந்திகள்

வதந்திகள்

கடந்த சில தினங்களாக மீடியாக்களில் ரஜினி உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள், தகவல்கள் பரவிக் கொண்டுள்ளன. அவற்றை ரஜினி குடும்பத்தினர் மறுத்து வருகின்றனர்.

கபாலி வெற்றிக்காக

கபாலி வெற்றிக்காக

இந்த நிலையில், இன்று திங்கட்கிழமை தங்கள் தலைவர் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும், விரைவில் திரைக்கு வர இருக்கும் அவரது கபாலி திரைபடம் மாபெரும் வெற்றி பெற வேண்டியும் இந்த பிரார்த்தனையை நடத்தியுள்ளனர்.

பிரார்த்தனை

பிரார்த்தனை

வேலூர் மாவட்டம், சோளிங்கர் நகரில் உள்ள அருள்மிகு சோழபுரீஸ்வரர் சுவாமிக்கு சோளிங்கர் என்.ரவி முன்னிலையில் சிறப்பு யாகமும், கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது.

அன்னதானம்

அன்னதானம்

இவ்விழாவில் நூற்றுக்கான ரசிகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு ஈசனிடம் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து 2000 நபர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.

சோளிங்கர் ரவி

சோளிங்கர் ரவி

வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளரான என் ரவி, சில மாதங்களுக்கு முன் ரஜினி ரசிகர் மன்ற மாநாட்டை நடத்தி தமிழகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தவர். ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது, முழங்கால்களால் சோளிங்கர் மலைப் படிக்கட்டுகளில் ஏறி பிரார்த்தனை செய்தவர் இவர்தான்.

English summary
Hundreds of hardcore fans of Rajinikanth have performed special pooja and yagam at Sholingar Chozhapureeswarar Temple for Rajinikanth's health and Kabali movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil