»   »  வந்துட்டேன் கண்ணா வந்துட்டேன்: ரசிகர்களை துள்ளிக்குதிக்க வைத்த ரஜினி

வந்துட்டேன் கண்ணா வந்துட்டேன்: ரசிகர்களை துள்ளிக்குதிக்க வைத்த ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி தனிக்கட்சி துவங்கப் போவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை பெருமகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். முதல் நாளே அவர் அரசியல் குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அவரோ வரும் 31ம் எனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கிறேன் என்றார்.

ஆவல்

ஆவல்

ரஜினி கடந்த செவ்வாய்க்கிழமை கூறியதில் இருந்தே அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 31ம் தேதியும் வந்துவிட்டது. இன்று ரஜினி நிச்சயம் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரஜினி

ரஜினி

அரசியலுக்கு வருகிறேன், கட்சி துவங்குகிறேன் கண்ணா என்று ரஜினி இன்று அறிவிப்பார் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போன்றே தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார்.

கட்சி

கட்சி

தனிக்கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பை கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

தலைவா

தலைவா

புத்தாண்டு நம் ஆண்டாக பிறக்கட்டும், அரசியலுக்கு வருகிறேன் என நல்ல வார்த்தை சொல்லு தலைவா என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அரசியலுக்கு வந்து மாற்றத்தை ஏற்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்று ரஜினி நல்ல வார்த்தை சொல்லிவிட்டார்.

English summary
Rajinikanth fans are excited as their thalaivar has announced that he is going to contest in the TN assembly election by starting a new party. Fans couldn't control their excitement after hearing his announcement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X