»   »  ஷோலேவை கூட உங்களால் தான் பிளாப்பாக்க முடியும்: வர்மாவுக்கு வெங்கட் பிரபு பதிலடி

ஷோலேவை கூட உங்களால் தான் பிளாப்பாக்க முடியும்: வர்மாவுக்கு வெங்கட் பிரபு பதிலடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தை வம்புக்கு இழுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மாவை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ட்விட்டரில் தாளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எந்திரன், கபாலி ஆகிய படங்களில் அமிதாப் பச்சன் நடித்தால் அது சிறப்பாக இருக்கும். அதுவே அமிதாப் நடித்த TE3Nடீன் படத்தில் ரஜினி நடித்தால் அது நன்றாக இருக்காது என இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ராம் கோபால் வர்மாவை ட்விட்டரில் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஷோலே

ராம் கோபால் வர்மா சார் உங்களால் மட்டும் தான் ஷோலே படத்தை பிளாப்பாக்க முடியும்!! எங்கள் சூப்பர் ஸ்டார் TE3N படத்தில் கூட சரித்திரம் படைப்பார் என இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட்டியுள்ளார்.

ரஜினி

ரஜினிகாந்தை வம்பிழுத்துள்ள ராம் கோபால் வர்மாவுக்காக ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சைலேஷ்.

படம்

ராம் கோபால் வர்மா போய் தூங்குங்க இல்ல ரஜினி நடித்த படம் ஏதாவது பாருங்க என்கிறார் சிவபாலன்.

ஜாம்பவான்கள்

நீங்கள் இது போன்ற முட்டாள்தனமான கேள்விகளை கேட்பதை நம்ப முடியவில்லை ராம் கோபால் வர்மா. ரஜினியும், அமிதாபும் அவரவர் வழியில் ஜாம்பவான்கள் என்று கிஷோர் தெரிவித்துள்ளார்.

திட்டு

திட்டு

ராம் கோபால் வர்மாவை சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். சிலர் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாகரீகம் கருதி அத்தகைய ட்வீட்டுகளை இங்கே போடவில்லை.

English summary
Rajinikanth fans are trolling director Ram Gopal Varma on twitter after he compared superstar with Amitabh Bachchan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil