»   »  போய்யா நீயும் வேணாம்... உன் தியேட்டரும் வேணாம்! - காசியில் ரஜினி ரசிகர்கள் ஆவேசம்

போய்யா நீயும் வேணாம்... உன் தியேட்டரும் வேணாம்! - காசியில் ரஜினி ரசிகர்கள் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கமாக ரஜினியின் படங்கள் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சி முந்தைய நாள் இரவு அல்லது முதல் நாள் அதிகாலையில் சிறப்புக் காட்சிகளாக ரசிகர்களுக்கு திரையிடப்படும்.

இந்தக் காட்சியின்போது குறிப்பாக சென்னை கேகே நகரில் உள்ள காசி திரையரங்கம் அதகளப்படும்.


மேள தாளங்கள், வாணவேடிக்கை, நடனங்கள் என திரையரங்கமே ஒரு திருவிழா மையம்போல காட்சி தரும்.இந்த முறை கபாலி ரிலீசையொட்டி இந்த அதிரடி கொண்டாட்டங்களை நேற்றே தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். காசியில் படம் வெளியாகிறதா இல்லையா என்ற சந்தேகம் இருந்த போதிலும், நள்ளிரவிலிருந்தே பேனர்கள், தோரணங்கள் கட்டி, வாண வேடிக்கை நடத்திக் கொண்டிருந்தனர்.


காலை 4 மணிக்கு முதல் சிறப்புக் காட்சி திரையிடப்போவதாக அறிவித்து, ஏக விலைக்கு டிக்கெட்டுகளையும் விற்றிருந்தனர். இந்த டிக்கெட்டுகளில் பெருமளவு ரசிகர்களுக்குப் போகவில்லை. ஐடி மற்றும் பெரும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் போய்விட்டது.


மேலும் பேனர்கள் வைப்பது, ரசிகர் கொண்டாட்டங்கள் நடத்துவதிலும் ஏக கெடுபிடி காட்டியுள்ளனர் தியேட்டர்காரர்களும் போலீசாரும். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன ரசிகர்கள், போய்யா நீயும் உன் தியேட்டரும்... பேனர் கட்டி திருவிழா மாதிரி கொண்டாடற எனக்கே டிக்கெட் இல்லையா... என்று கூறிவிட்டு, கட்டிய பேனர்களை அவிழ்த்துச் சென்றனர் ரசிகர்கள்.

English summary
Some fans of Rajinikanth, who got irritated over the attitude of Kasi theater staffs remove their banners from the theater and gone to some other theaters to watch Kabali.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil