»   »  அரசியலில் ரஜினியின் வழி, காமராஜர் - அண்ணா வழி! - தமிழருவி மணியன்

அரசியலில் ரஜினியின் வழி, காமராஜர் - அண்ணா வழி! - தமிழருவி மணியன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : காமராஜர் மற்றும் அண்ணா வழியில் அரசியல் செய்யப்போவதாக தமிழருவி மணியனிடம், ரஜினி தெரிவித்துள்ளார்.

இதுவரை தமிழக தொலைக்காட்சிகள் மட்டுமே ரஜினியின் அரசியலை மையப்படுத்தி பரபரப்பு கிளப்பி வந்தனர். சமீபத்தில் கமல் ஹாசனின் அரசியல் ட்விட்களைத் தொடர்ந்து, தமிழக ஊடகங்கள் அவரை முன்னிலைப்படுத்தி வருகிறார்கள்.

Rajini to follow Kamarajar and Anna in Politics

இந் நிலையில் வட இந்திய தொலைக்காட்சிகளுக்கு ரஜினியின் அரசியல் முக்கிய செய்தியாகி வருகிறது. ரஜினியுடன் தொடர்புடையவர்களை எல்லாம் பேட்டி கண்டு செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.

தமிழக தொலைக்காட்சிக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, ரஜினியின் அரசியல் குறித்து எந்த கருத்தும் தெரிவித்ததில்லை. வட இந்திய சேனல்களுக்கு ரஜினியின் முக்கிய திட்டங்கள் தண்ணீர் பிரச்சனை தீர்ப்பதும், அரசியலில் ஊழலை ஒழிப்பதும் என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

தமிழருவி மணியனிடமும் வட இந்திய சேனல் பேட்டி கண்டுள்ளார்கள். அரசியலுக்கு ரஜினி நிச்சயம் வருகிறார். தனிக்கட்சி அமைத்து ஆட்சியை பிடிப்பார் என்று அவர் உறுதிபட கூறியுள்ளார்.

மேலும் அரசியலில் காமராஜர் மற்றும் அண்ணாவை பின்பற்றப் போவதாக ரஜினி கூறியுள்ளதையும், தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

காமராஜரும் அண்ணாவும் மட்டுமே அரசியலுக்கு வந்து சொத்து சேர்க்காத தலைவர்கள். ஆகையால் அவர்கள் இருவர்தான் தனக்கு வழிகாட்டிகள் என்றும் ரஜினி கூறியுள்ளார்.

ஏற்கனவே தனது முதல் அறிவிப்பாக, பணம் சம்பாதிக்கும் ஆசையுள்ள ரசிகர்களை சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று ரஜினி கூறியிருந்தார்.

தற்போது திருச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில், ரஜினியின் அரசியல் வருகைக்கான முன்னோட்டமாக பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 20ம் தேதி திருச்சியில் தமிழருவி மணியன் தலைமையில் நடைபெறும் இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு, ரஜினி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

English summary
Tamizharuvi Maniyan says that Rajini would follow Kamarajar and Anna in Politics

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X