»   »  இதய நோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி!

இதய நோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: இதய நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர் ஒருவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்தார் ரஜினிகாந்த்.

ரஜினி தற்போது ‘கபாலி' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக மலேசியாவில் தங்கியுள்ளார். மலேசியாவில் ரஜினி போகும் இடமெல்லாம் திருவிழாக் கோலம்தான். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், மலேசிய, ஜப்பானி, சீன மக்களும் ரஜினியைக் காண ஆவலுடன் திரண்டு வருகிறார்கள்.

Rajini fulfills a heart patient's long time wish

பலர் அவரைக் கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். சிலர் அவரது முழு உருவத்தையும் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டு போய் அவரிடமே காட்டி மகிழ்கின்றனர்.

இதய நோயால் பாதிக்கப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த ஒரு ரசிகர் நீண்டநாளாக ரஜினியைப் பார்க்க ஆசை கொண்டிருந்தார். இந்த விஷயம் கேள்விப்பட்ட ரஜினி, அந்த ரசிகரை நேரில் வரவழைத்து அவருடன் சிறிது நேரம் செலவிட்டுள்ளார். மிகப்பெரிய நடிகர், பிசியான நேரத்திலும் ஒரு ரசிகரின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து, அவரை சந்தித்தது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ரஜினி அந்த ரசிகருடன் சிரித்து பேசுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

English summary
Recently Rajinikanth has fulfilled a heart patient fan's wish to meet him and blessed the fan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil