»   »  ஐஸ்வர்யாவின் சினிமா வீரனுக்காக வாய்ஸ் கொடுக்கும் ரஜினி!

ஐஸ்வர்யாவின் சினிமா வீரனுக்காக வாய்ஸ் கொடுக்கும் ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் புதிய படமான சினிமா வீரனுக்காக வாய்ஸ் கொடுக்கிறார் ரஜினிகாந்த்.

3, வை ராஜா வை படங்களைத் தொடர்ந்து ரஜினியின் மூத்த மகளும் தனுஷ் மனைவியுமான ஐஸ்வர்யா இயக்கும் மூன்றாவது படம் சினிமா வீரன். இந்தப் படம் சினிமாவில் ஸ்டன்ட் மாஸ்டர்களாகப் பணியாற்றியவர்களைப் பற்றிய கதை.

Rajini to give voice over to Cinema Veeran

படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனமே தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் சிறப்பு, படத்தின் அறிமுகக் காட்சிக்கு ரஜினிகாந்தே குரல் கொடுப்பதுதான்.

இளையமகள் சௌந்தர்யா இயக்கத்தில் ஒரு படமே நடித்து விட்ட ரஜினி, தனது மூத்த மகள் இயக்கும் படத்துக்கு முதல் முறையாகக் குரல் கொடுக்கிறார்.

நேற்று 'சினிமா வீரன்' படத்தின் போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்த ஐஸ்வர்யா, "சினிமா வீரன், தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என்னுடைய அர்ப்பணிப்பு. அவர்கள் புகழப்படாத நிஜ நாயகர்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Rajinikanth is giving voice over to his daughter Aishwarya's directorial venture Cinema Veeran.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil