»   »  'அம்மா' இல்லாத நேரத்தில் அவர் ஸ்டைலில் குட்டிக் கதை சொன்ன ரஜினி

'அம்மா' இல்லாத நேரத்தில் அவர் ஸ்டைலில் குட்டிக் கதை சொன்ன ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் தனது ரசிகர்கள் மத்தியில் பேசியபோது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டைலில் குட்டிக் கதை ஒன்றை கூறினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 8 ஆண்டுகள் கழித்து தனது ரசிகர்களை இன்று சந்தித்துள்ளார். அவர் இன்று முதல் 19ம் தேதி வரை தொடர்ந்து தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

இன்றைய நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டைலில் குட்டிக் கதை ஒன்றை கூறினார்.

முதலை கதை

முதலை கதை

தண்ணில கால் வைக்கப் போறோம். வைத்த பிறகுதான் உள்ள ஏகப்பட்ட முதலைகள் இருப்பது தெரிகிறது. உடனே முன் வச்ச காலை பின்னே எடுக்க மாட்டேன் என்ற முரட்டுத் துணிச்சலோடு தொடர்வது புத்திசாலித்தனமா? அப்படி ஒரு முரட்டுத் துணிச்சல் எனக்கில்லை. சந்தர்ப்ப சூழல் பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

அரசியல்

அரசியல்

ரஜினி அரசியலுக்கு வர மாட்டாரா என்று அவரது ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கிறார்கள். இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் பேசிய ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பளிச்சென்று எதுவும் கூறவில்லை.

குழப்பம்

குழப்பம்

ரஜினியின் இன்றைய பேச்சை கேட்டு ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தலைவர், அரசியலுக்கு வருவேன் என்கிறாரா, வரவே மாட்டேன் என்கிறாரா என ஒன்னும் புரியலையே என்று குழம்புகிறார்கள்.

மீம்ஸ்

மீம்ஸ்

ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் பற்றி குழப்பமாக பேசியதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு சமூக வலைதளங்களில் சுற்றவிட்டுள்ளனர்.

English summary
Super star Rajinikanth told a short story just like former CM Jayalalithaa in today's function in Raghavendra hall.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil