Don't Miss!
- News
மநீம இணையதளம் ஹேக் "அரசியல் சதி".. யார் யார் மீது சந்தேகம்..? லிஸ்ட் போட்டு போலீசில் புகார்!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ரஜினி எடுத்த அதிரடி முடிவு... தன்னையே கலாய்த்த இயக்குநருக்கு தலைவர் 171 படத்தில் வாய்ப்பு?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
அடுத்ததாக தலைவர் 171 படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் சில மாற்றங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஃபர்ஸ்ட் திருப்பதி.. நெக்ஸ்ட் அமீன் தர்கா.. ஏ.ஆர். ரஹ்மான் உடன் ரஜினிகாந்த் வழிபாடு.. என்ன காரணம்?

கை கொடுக்குமா ஜெயிலர்?
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இதுவரை 60 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினி இறுதியாக நடித்திருந்த அண்ணாத்த எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப் பெறவில்லை. இதனால் ஜெயிலர் படத்தை பெரிதாக நம்பியுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை கண்டிப்பாக ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என நெல்சனும் தீயாக வேலை செய்து வருகிறாராம்.

பரபரக்கும் தலைவர் 170
ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு லைகா தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினி கமிட் ஆகியுள்ளார். அதில் ரஜினியின் 170வது படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். லால் சலாம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விதார்த் இருவருமே ஹீரோவாக நடிக்க, ரஜினிகாந்த் சிற்ப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநரை மாற்றிய ரஜினி?
லால் சலாம் படத்தைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. சிபி சக்கரவர்த்தியும் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியிருந்தார். அப்பொது ரஜினிக்கு கதை சொன்னதாகவும் விரைவில் அந்தப் படம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இந்தக் கூட்டணி இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். சிபி சக்கரவர்த்தியின் கதையில் ரஜினிக்கு திருப்தி இல்லை என்பதால் அதிலிருந்து விலகியதாகத் தெரிகிறது. இதனையடுத்து தற்போது ரஜினியின் புதிய இயக்குநர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தலைவரே இது நியாயமா?
முதல் படமான கோமாளி மூலம் கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக லட் டுடே படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் சக்கைப்போடு போட்டது. அந்நேரம் பிரதீப் ரங்கநாதனை வீட்டுக்கு அழைத்து பாராட்டினார் ர்ஜினிகாந்த். அப்போது அவர் கோமாளி படத்தில் தன்னை கலாய்த்து ஒரு சீன் வைத்ததையும் பிரதீப் ரங்கநாதனிடம் கேட்டு சிரித்து மகிழ்ந்துள்ளார். கோமாளி படத்தில் ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்லின் இன்னும் வராமல் இருப்பதை கலாய்த்து ஒரு காமெடி சீன் வரும். அதையே ரஜினியும் பிரதீப்பிடம் கேட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.