»   »  'பர்ஃபெக்டா ஃபிட்டா இருக்கார்'! அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார் ரஜினி!

'பர்ஃபெக்டா ஃபிட்டா இருக்கார்'! அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார் ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் இரு வார ஓய்வுக்குப் பிறகு அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2 மாதங்களாக ரசிகர்கள் சந்திப்பு, காலா படப்பிடிப்பு என்று ஓய்வில்லாமல் இருந்தார். மும்பையில் காலா படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்ததும், அவர் கடந்த மாதம் 28-ந் தேதி இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

ஏற்கனவே 'கபாலி' படம் முடிந்தபோதும் அவர் அமெரிக்காவுக்கு சென்று ஓய்வு எடுத்தார். தற்போது அமெரிக்காவில் தங்கி இருக்கும் அவர் மருத்துவமனைக்கு சென்று முழு பரிசோதனை செய்து கொண்டார்.

பரஃபெக்ட்

பரஃபெக்ட்

அவரது உடல்நிலை பர்ஃபெக்டாக இருப்பதாக டாக்டர்கள் கூறியதும், தெம்பாக அமெரிக்காவின் சுற்றுலா பகுதிகளுக்கு நண்பர்களுடன் சென்று வருகிறார்.

ரசிகர்களுடன்

ரசிகர்களுடன்

அமெரிக்காவில் ரஜினிகாந்த் செல்லும் இடங்களிலெல்லாம் ரசிகர்கள் முற்றுகையிட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். அவருடன் செல்பியும் எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு காரில் பயணித்தபோது ரஜினியே தன்னை செல்பியில் படமாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அங்குள்ள விமான நிலையத்தில் வெளிநாட்டு ரசிகைகள் அவருடன் போட்டி போட்டு செல்பி எடுத்துக்கொண்டனர்.

இன்னும் ஒரு வாரம்

இன்னும் ஒரு வாரம்

மேலும் சில நாட்கள் அமெரிக்காவில் தங்கி இருக்கும் ரஜினிகாந்த் அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார். காலா படப்பிடிப்பின் அடுத்த ஷெட்யூல் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது. ரஜினிகாந்த் 12-ம் தேதிக்குப் பிறகு இதில் கலந்து கொள்கிறார். இதற்காக சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் மும்பை தாராவி பகுதியை அரங்காக அமைத்துள்ளனர்.

2.ஓ

2.ஓ

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘2.0' படத்தின் தொழில்நுட்ப வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த படம் 3டியில் ரூ.400 கோடி செலவில் தயாராகி உள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் ஜப்பான், சீன, ஸ்பானிஷ் மொழிகளிலும் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷன்களில் பங்கேற்கவுள்ளார் ரஜினி.

English summary
Superstar Rajinikanth will return to Chennai from US on next week.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil