twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார்பென்டராக இருந்து கண்டக்டராக மாறி.. உழைப்பால் உயர்ந்த ரஜினி.. 5ம் வகுப்பு புத்தகத்தில் தகவல்

    நடிகர் ரஜினி பற்றிய குறிப்பு பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

    |

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பற்றிய குறிப்பு தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் அவர் கடினமாக உழைத்து உயர்ந்தவர் என்று புகழ்ந்துள்ளனர்.

    அமிதாப் பச்சன் போல இந்திய அளவில் சினிமாத் துறையில் பிரபலமானவர் ரஜினிகாந்த். இந்திய சூப்பர்ஸ்டார்களில் இவரும் ஒருவர். இவரது ஸ்டைலுக்காகவே ரசிகர் கூட்டம் கோடிக்கணக்கில் இருக்கு.

    இன்று தனக்கென பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் ரஜினி குறித்து தமிழக அரசின் பாடத் திட்டத்தில் ஒரு செய்தி போட்டுள்ளனர். அதுவும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் போட்டுள்ளனர்.

    ஆண்மையில்லாத்தனம்: இளையராஜா சொன்னதில் என்ன தவறு?: கங்கை அமரன் ஆண்மையில்லாத்தனம்: இளையராஜா சொன்னதில் என்ன தவறு?: கங்கை அமரன்

    பாடப்புத்தகம்:

    தமிழக அரசின் 5ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் 'Rags To Riches Story ' என்கிற பாகத்தில் இவரைப்பற்றிய தகவல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அதில், தங்களது குழந்தைப் பருவத்தில் கடும் வறுமையில் அல்லாடி, தனது கடின உழைப்பினாலும், திறமையாலும் அர்ப்பணிப்பாலும் மாபெரும் இடத்திற்கு உயர்ந்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சார்லி சாப்ளின்:

    சார்லி சாப்ளின்:

    அந்தப் பக்கத்தில் ரஜினியின் புகைப்படம் மட்டுமின்றி, சார்லி சாப்ளின், ஸ்டீவ் ஜாப் மற்றும் சிலரது புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. பணத்தால் மட்டுமின்றி திறமையாலும் பிரபலமான அவர்களது பெயர்களை மாணவர்கள் நிரப்பும் படி அந்தப் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கடின உழைப்பு:

    கடின உழைப்பு:

    ரஜினியின் புகைப்படத்திற்கு கீழே, ‘கார்ப்பெண்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, கண்டக்டர் ஆனவர். பின் சினிமாவில் அறிமுகமாகி சூப்பர்ஸ்டார் என்ற நிலைக்கு உயர்ந்தவர். நமது கலாச்சாரத்தின் அடையாளமாக இன்று உள்ளார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்திரன் படத்தில் உள்ள ரஜினியின் புகைப்படம் அதில் உள்ளது.

    ரசிகர்கள் மகிழ்ச்சி:

    ரசிகர்கள் மகிழ்ச்சி:

    ரஜினி பற்றிய விபரங்கள் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. சம்பந்தப்பட்ட பாடப்புத்தக பக்கத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, தங்களது மகிழ்ச்சி அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

     மத்தவங்கல்லாம்

    மத்தவங்கல்லாம்

    ரஜினி மாதிரியே வேறு பலரும் கூட இளைஞர்களுக்கு உதாரணமாக விளங்கி வருகிறார்கள். அவர்களைப் பற்றியும் கூட பாடத்தில் சேர்க்கலாம். காரணம், இறந்த பிறகு ஒருவரைப் பற்றி படித்து மார்க் வாங்குவதற்குப் பதில் இருக்கும் காலத்திலேயே அவர்களுக்குரிய கவுரவத்தை கொடுப்பது மாணவர்களுக்கும் கூட உத்வேகமாக இருக்கும் இல்லையா.. அரசு செய்யுமா!

    English summary
    The Tamilnadu government have included a short note about actor Rajinikanth in its 5th std school book.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X