Don't Miss!
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- News
"ஹாட்ரிக்".. பாஜக வீசிய பந்தை "சிக்ஸர்" அடித்த எடப்பாடி.. "ரன் அவுட்" ஆன ஓபிஎஸ்.. ஒரே நாளில் அதிரடி
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சௌந்தர்யா ரஜினிகாந்த் கர்ப்பம்..ரஜினி நான்காவது முறையாக தாத்தாவாகிறார்!
சென்னை : ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால், நண்பர்கள், உறவினர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் தான். உலகம் முழுவதும் இவருக்கு என்று தான். தனி ரசிகர் படை உள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங் உள்ளது.
ஐடி ரெய்டில் சிக்கிய சினிமா பிரபலங்கள்: அரசியல் பின்னணி தான் காரணமா? கார்த்தி சொல்றது தான் உண்மையா?

சௌந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் அப்பாவைப் போலவே சினிமாவில் ஈடுபடு இருந்ததால், ரஜினியை வைத்து கோச்சடையானும், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படமும் இயக்கினார். ஆனால் இருவருக்கு எதிர்பர்த்த வெற்றி கிட்டவில்லை. இதையடுத்து, இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கினார்.

கருத்து வேறுபாடு
சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்தது. பின் சௌந்தர்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது இந்த குழந்தைக்கு வேத் கிருஷ்ணா என பெயர் வைத்தனர் பிறந்தது. ஏற்கனேவே சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. பின் இதன் காரணமாக சௌந்தர்யா பெற்றோர் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விட்டார்.

பரஸ்பரமாக விவாகரத்து
பிறகு இவர்கள் இருவருக்கும் தங்கி மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்திருந்தனர். பின்னர் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். அதுக்கு பின் சௌந்தர்யா தன்னுடைய மகன் வேத்துடன் ரஜினிகாந்த் வீட்டில் தான் வசித்து வந்தார். சௌந்தர்யா விவாகரத்துக்கு பின் முழு கவனத்தையும் அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது போன்ற வேலைகளில் கவனம் செலுத்தினார்.

மறுமணம்
இதையடுத்து, 2019ம் ஆண்டு நடிகர் விசாகன் வணங்காமுடியை மறுமணம் செய்து அவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர்யா தம்பதியரின் முதல் குழந்தையுடன் கர்ப்பமானார், சமீபத்தில் வளைகாப்பு விழா நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வணங்காமுடி இல்லத்தில் இந்த நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

மகிழ்ச்சியில் ரஜினிகாந்த்
அக்டோபரில் பிரசவத்திற்கு டாக்டர்கள் தேதி கொடுத்துள்ளதாகவும், ஐஸ்வர்யா-தனுஷ் பிரிந்ததால் கலக்கத்தில் இருந்த ரஜினிகாந்த் குடும்பம் புதிய வரவால் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினி நான்காவது முறையாக தாத்தாவாக தயாராகி உள்ளார். ரஜினி குடும்பத்தின் புதிய வரவுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.