»   »  இவரெல்லாம் எப்படி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்?.. மீண்டும் ரஜினியைச் சீண்டிய ராம் கோபால் வர்மா

இவரெல்லாம் எப்படி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்?.. மீண்டும் ரஜினியைச் சீண்டிய ராம் கோபால் வர்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதாராபாத்: இவரெல்லாம் எப்படி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்? என ரஜினியை மீண்டும் சீண்டியிருக்கிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

டோலிவுட்டின் சர்ச்சை இயக்குநர் என்பதை அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களால் ராம் கோபால் வர்மா நிரூபித்து வருகிறார்

இதுநாள்வரை சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராஜமௌலி, பிரபாஸ், அல்லு அர்ஜுன் என டோலிவுட் பிரபலங்களை சீண்டி வந்த ராம் கோபால் வர்மாவின் கவனம், தற்போது ரஜினியின் மீது திரும்பியுள்ளது.

பவன் கல்யாண்

பவன் கல்யாண்

கடந்த வாரம் தான் பவன் கல்யாண் ரசிகர்களை சமாதானம் செய்வதற்காக ரஜினியை விட, பவன் கல்யாண் 5 மடங்கு சிறந்தவர் என ராம் கோபால் வர்மா கூறியிருந்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் ரஜினியை விமர்சித்து அவரின் ரசிகர்கள் கோபத்திற்கு ராம் கோபால் வர்மா ஆளாகியிருக்கிறார்.

2.ஓ

எமி ஜாக்சன் 2.ஓ படப்பிடிப்பில் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட, அதனை வைத்து ராம் கோபால் வர்மா ஏகத்திற்கும் கிண்டல் செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் "நட்சத்திர அந்தஸ்துக்கான தோற்றத்தையே இந்த மனிதர் அழித்து விட்டார். நல்ல தோற்றம், சிக்ஸ்பேக், உடல்வாகு எதுவும் இல்லை. டான்ஸில் கூட இரண்டரை அளவு தான் தெரியும்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

உலகில் இப்படி ஒரு தோற்றம் கொண்ட மனிதர் சூப்பர் ஸ்டாராக இருந்து நான் பார்த்தது இல்லை. இவர் கடவுளுக்கு என்ன செய்தார்? கடவுள் தான் இவருக்கு என்ன செய்தார்?. சினிமாவில் ரசிகர்களின் ரசனையைப் புரிந்து கொள்ள முடியாது என்பதற்கு இவர் சிறந்த உதாரணம்.

சிறந்த நிபுணர்கள்

சிறந்த நிபுணர்கள்

ரஜினியின் தோற்றம் குறித்து விளக்க சொன்னால் உலகின் தலை சிறந்த நிபுணர்கள் கூட குழம்பி விடுவார்கள்" இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்திருக்கிறார். கடைசியில் ரஜினியை நான் புகழ்ந்துள்ளேன் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளவில்லை. ரஜினியும் இதனை ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ராம் கோபால் கோரிக்கை வைத்திருப்பதுதான் இதில் ஹைலைட்.

தற்போது ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில், ராம் கோபால் வர்மாவைத் திட்டி தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

English summary
Director Ram Gopal Varma says "The greatest psychiatrists in the world will collapse with the challenging task of explaining the Rajni Phenomenon".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil