»   »  ரஜினிகாந்த் நலமாக உள்ளார்: நம்பாட்டி இந்த வீடியோவை பாருங்க!

ரஜினிகாந்த் நலமாக உள்ளார்: நம்பாட்டி இந்த வீடியோவை பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு சென்ற ரஜினி தற்போது நலமுடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

2.0 படப்பிடிப்பில் சனிக்கிழமை ரஜினிகாந்த் கலந்து கொண்டார். சண்டை காட்சியை படமாக்கியபோது அவர் கால் தவறி கீழே விழுந்தார். இதில் முழங்காலில் காயம் ஏற்பட்டது.

உடனே கேளம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ரஜினி

ரஜினி

மருத்துவமனையில் அரை மணிநேர சிகிச்சைக்குப் பிறகு ரஜினி வீட்டிற்கு சென்றார். இதற்கிடையே அவர் காயம் அடைந்த செய்தி அறிந்து ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

நலம்

நலம்

ஏற்கனவே உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை எடுத்த நிலையில் தற்போது காயம் வேறா என்று ரசிகர்கள் கவலை அடைந்த நேரத்தில் அவர் நலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீடியோ

சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய ரஜினி இரவு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டார். அங்கிருந்து அவர் கிளம்பிச் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. அவர் நல்லபடியாக நடந்து செல்வது ரசிகர்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ரஜினிக்கு லேசான காயம் என்றபோதிலும் அவரது ரசிகர்கள் துடித்துவிட்டனர். ரஜினி விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திப்பதாக பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

English summary
Super star Rajinikanth who got injured on 2.0 sets is doing just fine.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil