»   »  ரஜினி பூரண நலம்... 2.ஓ பணிகளில் பிஸி... அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார்- குடும்பத்தினர் விளக்கம்

ரஜினி பூரண நலம்... 2.ஓ பணிகளில் பிஸி... அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார்- குடும்பத்தினர் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பூரண நலத்துடன் இருப்பதாகவும், 2.ஓ பணிகளில் பிஸியாக உள்ள அவர் அடுத்த வாரம் சென்னை திரும்புவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து திடீரென இன்று காலையிலிருந்து வதந்தி பரவி வந்தது. இலங்கையைச் சேர்ந்த ஒரு இணையதளம் இந்த வதந்தியைக் கிளப்பியிருந்தது.

'Rajini is fine and healthy.. Busy in 2.O work at US'

இது கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ரஜினி ஒரு மிகப் பெரிய பிரபலம். அவரைப் பற்றிய எந்த செய்தியையும் மறைக்க முடியாது என்ற உண்மையைக் கூட யாரும் உணரவில்லை. மளமளவென இதுகுறித்து பரபரப்புச் செய்திகளை வெளியிட ஆரம்பித்தனர். செய்திச் சேனல்களும் இதையே செய்தன.

இந்த நிலையில், ரஜினி உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் ராகவேந்திரா மண்டப நிர்வாகிகள் விளக்கம் வெளியிட்டுள்ளனர்.

'Rajini is fine and healthy.. Busy in 2.O work at US'

அதில், ரஜினிகாந்த் பூரண நலமுடன் இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து வரும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். இப்போது அமரிக்காவில் 2.ஓ பட வேலைகளில் உள்ள ரஜினி, அடுத்த வாரம் சென்னை திரும்புவார் என்று தெரிவித்துள்ளனர்அ.

மேலும் ரஜினி மன்றங்களின் பொறுப்பாளரும் ராகவேந்திரா மண்டப நிர்வாகியுமான சுதாகரும் தனது பேஸ்புக் பக்கத்தில் ரஜினி நலமுடன் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

English summary
Rajinikanth's family has denied all rumours on the actor's health and said he would

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil