»   »  தனுஷ் போன்று புதிய அவதாரம் எடுத்த ஐஸ்வர்யா: ரஜினி பெருமை

தனுஷ் போன்று புதிய அவதாரம் எடுத்த ஐஸ்வர்யா: ரஜினி பெருமை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது மூத்த மகள் எழுதிய புத்தகம் வெளியானதை நினைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகிழ்ச்சியில் உள்ளார்.

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய வாழ்வில் நடந்தவற்றை ஸ்டாண்டிங் ஆன் என் ஆப்பிள் பாக்ஸ் என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

Rajini is so proud of daughter Aishwarya

இந்த புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார், நடிகை சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரு சூப்பர் ஸ்டாரின் மகளாக இருக்கும் அனுபவத்தை ஐஸ்வர்யா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்நிலையில் இது குறித்து ரஜினி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் மகள் ஐஸ்வர்யா முதல்முதலாக எழுதிய #StandingOnAnAppleBox புத்தகம் வாசகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்... கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

சினிமா இயக்குனர், தயாரிப்பாளர், பரதநாட்டிய கலைஞராக இருந்து வரும் ஐஸ்வர்யா தற்போது எழுத்தாளர் அவதாரமும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Super star Rajinikanth is so proud of his daughter Aishwarya for her new avatar as a writer. Rajini tweeted that, 'I hope readers will like my daughter ash_r_dhanush 's first venture as a writer #StandingOnAnAppleBox ... god bless'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil