»   »  ரஜினி பற்றி நான் 'அப்படி' சொல்லவில்லை: திரித்து எழுதுவதை கண்டிக்கிறேன்- சேரன்

ரஜினி பற்றி நான் 'அப்படி' சொல்லவில்லை: திரித்து எழுதுவதை கண்டிக்கிறேன்- சேரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சில ஊடகங்கள் தங்கள் எண்ணங்களை எனது கருத்து மூலம் திணிக்கிறது ரஜினிக்கு அரசியல் தேவையா என தலைப்பிட்டு வன்மையாக கண்டிக்கிறேன் திரித்து எழுதுவதை என இயக்குனர் சேரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கடந்த 15ம் தேதி தனது ரசிகர்கள் மத்தியில் பேசினார். அதில் இருந்து அவர் அரசியலுக்கு வருவது பற்றி தான் எங்கு பார்த்தாலும் பேச்சாக உள்ளது.

இந்நிலையில் இது குறித்து இயக்குனரும், நடிகருமான சேரன் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

பொய்யே

#rajinikanthகளவும் ஊழலும் லஞ்சமும் சுயநலமும் நேர்மையின்மையும் சூழ்ந்த இந்த அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா.. உங்களுக்கு பொய்யே பேசவராதே என சேரன் ட்வீட்டியிருந்தார்.

சேரன்

சில ஊடகங்கள் தனது கருத்தை மாற்றி வெளியிட்டுள்ளதாக தெரிவித்து சேரன் ட்வீட்டியிருப்பதாவது, சில ஊடகங்கள் தங்கள் எண்ணங்களை எனது கருத்து மூலம் திணிக்கிறது ரஜினிக்கு அரசியல் தேவையா என தலைப்பிட்டு வன்மையாக கண்டிக்கிறேன் திரித்து எழுதுவதை.

ரஜினி

ரஜினிசார் நல்ல மனிதர். அரசியல் லாபங்களுக்காக அவரை வலியுறுத்தி இறக்கி ஆதாயம்தேட நினைப்பவர்களிடம் உஷார் என சொன்னேன். மக்கள் அழைத்தால் வாருங்கள் என ட்வீட்டியுள்ளார் சேரன்.

அரசியல்

அரசியல்

அரசியல் குறித்து ரஜினியாக பேசியதால் அவரது ரசிகரக்ள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் அரசியலுக்கு வருவார், சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார் என்று ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் கூட தெரிவித்துள்ளார்.

English summary
Director cum actor Cheran has condemned those who twisted his opinion on Rajinikanth entering politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil