»   »  'ஸ்பைடர்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கமல்... காரணம் இதுவா?

'ஸ்பைடர்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கமல்... காரணம் இதுவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'துப்பாக்கி', 'கத்தி' என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ். இவர் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் 'ஸ்பைடர்' படத்தை இயக்கியிருக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபுவின் பல படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தாலும், அவர் நடிக்கும் முதல் நேரடித் தமிழ் படம் 'ஸ்பைடர்'.

தெலுங்கு, தமிழில் தயாராகும் இந்தப் படத்தில் மகேஷ் பாபுவுடன் ரகுல் ப்ரீத்தி சிங், பிரியதர்ஷினி, உள்பட பலர் நடிக்கிறார்கள்.

எஸ்.ஜே.சூர்யா வில்லன் :

எஸ்.ஜே.சூர்யா வில்லன் :

பரத் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் 'ஸ்பைடர்' படத்தில் வில்லனாக நடிக்கிறார்கள். ஆர்.ஜே. பாலாஜி காமெடியனாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரமாண்டத் தயாரிப்பு :

பிரமாண்டத் தயாரிப்பு :

இது சூப்பர் நேச்சர் சயின்ஸ் ஃபிக்ஷன் படமாகத் தயாராகியிருக்கிறது. இதனை சுமார் 150 கோடி ரூபாய் செலவில் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'ஸ்பைடர்' படத்தின் தமிழ் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.

ஹீரோ அறிமுகம் :

ஹீரோ அறிமுகம் :

பாடல் வெளியீட்டு விழாவாக மட்டும் இல்லாமல் மகேஷ் பாபுவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக இதனை நடத்துகிறது படக்குழு. இப்படத்த்தின் தமிழ்நாட்டு உரிமத்தை லைகா நிறுவனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமல் பங்கேற்பு :

ரஜினி, கமல் பங்கேற்பு :

இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். தெலுங்கு சூப்பர்ஸ்டாரை அறிமுகப்படுத்தும் விழாவில் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் கலந்துகொள்வது ரசிகர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டியுள்ளது. விழாவில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கின்றன.

காரணம் இதுவா? :

காரணம் இதுவா? :

ரஜினி நடிக்கும் '2.O' படத்தை தயாரிப்பதும், கமலின் 'மருதநாயகம்' படத்தைத் தயாரிக்க இருப்பதும் லைகா நிறுவனம்தான் என்பதால் ரஜினி, கமல் ஆகியோர் கலந்து கொள்வது உறுதியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

English summary
Rajinikanth, Kamalhassan and other leading stars are present at the music launch event of 'Spider'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil