»   »  மீண்டும் கமலையும், ரஜினியையும் கே.பி. இயக்கணும்... நிராசையாகிப் போன ரசிகர்களின் ஆசை!

மீண்டும் கமலையும், ரஜினியையும் கே.பி. இயக்கணும்... நிராசையாகிப் போன ரசிகர்களின் ஆசை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினியையும், உலகநாயகன் கமலையும் இணைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்குநர் பாலசந்தர் இயக்க வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாமலேயே போய் விட்டது.

இயக்குநர் சிகரம் என அனைவராலும் அன்புடன் அழைக்கப் பட்ட இயக்குநர் பாலசந்தர் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது இழப்புக்கு ரசிகர்கள், கலைஞர்கள் மற்றும் தலைவர்கள் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவிற்கு ரஜினி உட்பட பிரபல நடிகர்கள் பலரை அறிமுகப் படுத்திய பெருமைக்குச் சொந்தக்காரர் பாலசந்தர். 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் ரஜினியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். இப்படத்தில் கமல் நாயகனாக நடித்திருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து மூன்று முடிச்சு, இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் என ரஜினி, கமல் இணைந்து நடித்த பலப் படங்கள் வெற்றிப் படங்களாகவே அமைந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும் முன்னணி நாயகர்களாகி விட, இருவரும் சேர்ந்து நடிப்பதற்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.

நினைத்தாலே இனிக்கும்...

நினைத்தாலே இனிக்கும்...

கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் மூலம் இணைந்து நடிக்கத் தொடங்கிய ரஜினி - கமல் ஜோடி, 1979ம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்துடன், ‘இனி ஒரே படத்தில் இணைந்து நடிப்பதில்லை' என்ற முடிவை எடுத்தனர்.

மீண்டும் கே.பி. இயக்கத்தில்...

மீண்டும் கே.பி. இயக்கத்தில்...

ஆனபோதும், தொடர்ந்து ரஜினி - கமலை இணைந்து ஒரே படத்தில் பார்க்க வேண்டும் என திரையுலக கலைஞர்களும், ரசிகர்களும் விரும்பி வருகின்றனர். அது பாலசந்தரால் மட்டுமே சாத்தியப் படும் எனவும் அவர்கள் நம்பினர்.

ஜெயப்பிரதா பேட்டி...

ஜெயப்பிரதா பேட்டி...

இது தொடர்பாக முன்னர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு நடிகை ஜெயப்பிரதா அளித்திருந்த பேட்டி ஒன்றில், ‘ரஜினி, கமலை மீண்டும் ஒரே படத்தில் இணைத்து நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இந்த முயற்சியில் டைரக்டர் பாலசந்தர் ஈடுபட்டு உள்ளதாக' தெரிவித்திருந்தார்.

தீவிரம்...

தீவிரம்...

மேலும், ‘இருவரின் சம்பளம், படத்துக்கான செலவு போன்றவைகளை காரணம் காட்டி சேர்ந்து நடிக்க சாத்தியம் இல்லை என கமல் கூறிவிட்ட போதும், இருவரையும் சேர்த்து நடிக்க வைக்க டைரக்டர் பாலச்சந்தர் தீவிரம் காட்டுகிறார்' என அவர் கூறியிருந்தார்.

கலைந்த கனவு...

கலைந்த கனவு...

இதனால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது. எப்படியும் 35 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலசந்தர் - ரஜினி - கமல் கூட்டணியில் ஒரு வெற்றிப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், பாலசந்தர் மரணத்தால் அந்தக் கனவு கலைந்துள்ளது.

English summary
Cinema fans were eager to see Rajini and Kamal in Balachandar's direction again after 35 years. But, it has not happened.
Please Wait while comments are loading...