Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய்யா? ரஜினியா? அஜித்தா? கமலா?...டாப் இடம் யாருக்கு தெரியுமா?
சென்னை : கொரோனாவிற்கு பிறகு ஒட்டுமொத்த சினிமா உலகமே மாறி உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மெல்ல மெல்ல திரையுலகம் மீண்டு வருகிறது.
தமிழ் சினிமாவிலும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஓடிடி ரிலீஸ் படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றின் வரத்து அதிகரித்துள்ளது. டாப் ஹீரோக்கள் படங்கள் வெற்றி அடையாத நிலையில், பல இளம் ஹீரோக்களின் படங்கள் வெற்றி அடைந்து ஷாக் கொடுத்து வருகின்றன.
இருந்தாலும் டாப் நடிகர் என்ற அந்தஸ்தை கடந்த 45 ஆண்டுகளாக ரஜினி தொடர்ந்து தக்க வைத்து வருகிறார். லிங்கா, தர்பார் போன்ற படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாத நிலையிலும், அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் லிஸ்ட்டில் ரஜினி தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார்.
ஜவான் படத்தில் விஜய் சேதுபதி.. சென்னையில் நடக்கும் சூட்டிங்கில் பங்கேற்பு.. ட்ரெண்டிங்கில் ஜவான்!

அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்
இந்திய அளவிலும் அதிக சம்பளம் பெறும் நடிகராக ரஜினி தான் பல காலமாக முதலிடத்தில் இருந்து வந்தார். ஆனால் பாகுபலி, பாகுபலி 2 படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர் என்ற பெயரை நடிகர் பிரபாஸ் தட்டிச் சென்றார். பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் தனது சம்பளத்தை 150 கோடியாக உயர்த்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.

கோலிவுட்டில் நம்பர் ஒன் யார்
கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது யார் என கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினி, விஜய், அஜித் ஆகியோரிடையே கடும் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் விஜய் முந்தி வந்து முதலிடத்தை பிடித்துள்ளார். வாரிசு படத்திற்காக விஜய்க்கு 120 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அடுத்ததாக அவர் நடிக்க உள்ள தளபதி 67 படத்திற்கு விஜய்க்கு 130 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சம்பளத்தை குறைத்தாரா ரஜினி
ஆனால் அதே சமயம், அண்ணாத்த படத்திற்காக ரஜினி 118 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததுடன், சில விமர்சனங்களையும் பெற்றதால், தற்போது நடிக்க உள்ள ஜெயிலர் படத்தில் நடிக்க தனது சம்பளத்தை 80 கோடியாக ரஜினி குறைத்துக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் வீரம் படத்திற்கு பிறகு அஜித் தனது சம்பளத்தை படிப்படியாக உயர்த்தி வந்துள்ளார். வலிமை படத்திற்கு அவர் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

நம்பர் ஒன் விஜய் கிடையாதா?
இதனால் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் விஜய் தான் முதலிடத்தில் இருந்துள்ளார். ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத மற்றொரு நடிகர், இந்த பட்டியலில் ரஜினி, விஜய், அஜித்தை ஓவர்டேக் செய்து முதலிடத்தை பிடித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அது வேறு யாரும் இல்லை. நடிகர் கமல்ஹாசன் தான்.

இவரை நினைக்கவே இல்லையே
இந்தியா சினிமாவின் பெருமை என சொல்லப்படும் கமல், தசாவதாரம், விஸ்வரூபம் என நூற்றாண்டு வெற்றி கொடுத்து, சினிமா உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் அரசியலில் கவனம் செலுத்தி வந்த இவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த விக்ரம் படம் மிகப் பெரிய வெற்றியை வெற்றுள்ளது.

இவர் தான் நம்பர் ஒன்
விக்ரம் படம் தமிழகத்தில் 200 கோடிகளையும், உலகம் முழுவதும் 500 கோடிகளையும் வசூல் செய்துள்ளது. விக்ரம் படத்தின் மாஸ் வெற்றிக்கு பிறகு கமல் தனது சம்பளத்தை 130 கோடி வரை உயர்த்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்திற்காக கமல் 130 கோடி வரை சம்பளம் வாங்கினால், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் கமல் முதலிடம் பிடிப்பார்.

இந்த நிலைமை மாறும்
ஆனால் இந்த தகவல் உறுதியாக தெரியாததால் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் கமலா? விஜய்யா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அஜித்தின் ஏகே 61, ரஜினியின் ஜெயிலர் படங்களின் ரிலீசிற்கு பிறகு இந்த நிலை மாறும். ஏகே 62 மற்றும் தலைவர் 170 படத்திற்காக அஜித் மற்றும் ரஜினி வாங்கும் சம்பள தொகை நிச்சயம் உயர்த்தப்படும் என அவர்களின் ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.