தாமரையை கழற்றி முத்திரையை பதித்த ரஜினிகாந்த் !!- வீடியோ
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாமரையை கழற்றிவிட்டுள்ளார்.
சூப்பர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் அறிவிப்பை வெளியிட்டார். அவர் நின்றிருந்த மேடையின் பின்னால் பாபா முத்திரை, தாமரை புகைப்படம் கொண்ட பேனர் இருந்தது.
இதை பார்த்தவர்கள் தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது என்று விமர்சித்தார்கள்.
தாமரை
ரஜினிகாந்த் பாஜகவின் ஆள் தான். அதனால் தான் தாமரையுடன் கூடிய பாபா முத்திரை பேனரை வைத்துள்ளார் என்று ஆளாளுக்கு விமர்சிக்கத் துவங்கினர்.
ஆப்
ரஜினிமன்ற இணையதளத்திலும் சரி, ஆப்பிலும் சரி பாபா முத்திரை மட்டுமே உள்ளது, தாமரையை கழற்றவிட்டுவிட்டார். இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
மோடி
தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்ற நினைக்கும் பாஜக ரஜினி மூலம் பின்வழியாக வரப் பார்க்கிறது என்று மீம்ஸ்கள் போட்டு பலர் சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.
பிரச்சனை
ரஜினிமன்ற இணையதளம் நன்றாக வேலை செய்கிறது. ஆனால் ஆப்பில் ஓடிபி வருவது இல்லை போன்ற சில பிரச்சனைகள் உள்ளது. இதை உடனே சரி செய்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
கலாய்
சிலரோ ரஜினிமன்ற இணையதளத்திலும் பிரச்சனை என்கிறார்கள். அதை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்களோ அவர் தான் சிஸ்டம் சிரியில்லை என்றாரே என கலாய்த்துள்ளனர்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.