»   »  ரஜினி வரலாற்றிலேயே முதல் முறையாக.. ஒரு கடை திறப்பு விழா.. இங்கல்ல மலேசியாவில்!

ரஜினி வரலாற்றிலேயே முதல் முறையாக.. ஒரு கடை திறப்பு விழா.. இங்கல்ல மலேசியாவில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலேசியா: நடிகர் ரஜினி முதன்முறையாக அவரது ரசிகர் ஒருவரின் ஷோரூம் ஒன்றை மலேசியாவில் திறந்து வைத்திருக்கிறார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கபாலி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது.இதற்காக ரஜினி கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு சென்று அங்கேயே தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.


Rajini Launches Showroom in Malaysia

இந்நிலையில் மலேசியாவில் ஜலன் துன் தன் சீவ் சின் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஷோரூம் ஒன்றை ரஜினி திறந்து வைத்துள்ளார்.


Rajini Launches Showroom in Malaysia

இந்த ஷோரூம் தத்தக் அப்துல் மாலிக் தஸ்தாகீர் என்பவருடையது.இவர் தான் கபாலி படத்தின் மலேசிய விநியோக உரிமையை வாங்கியிருக்கிறார்.


தனது திரையுலக வாழ்க்கையில் ரஜினி இதுவரை எந்தவொரு கடையையும் தனது கையால் திறந்து வைத்தது கிடையாது. தற்போது, முதல்முறையாக ஒரு ஷோரூமை திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Rajini Launches Showroom in Malaysia

ரஜினி தற்போது நடித்து வரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து அவர் ஷங்கரின் எந்திரன் 2.0 படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.


Rajini Launches Showroom in Malaysia

அக்ஷய்குமாருடன், ரஜினி மோதும் சண்டைக் காட்சிகளை மார்ச் முதல் எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாக கூறுகின்றனர்.

English summary
In First Time Rajinikanth Launches his Fan Showroom In Malaysia. The Showroom Managing Director Bought Kabali Distribute Rights in Malaysia Country.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil