»   »  ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் அதிரடி நீக்கம்.. 'முதல் களையெடுப்பு' தொடங்கியது!

ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் அதிரடி நீக்கம்.. 'முதல் களையெடுப்பு' தொடங்கியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பில் இருந்து முதன்முறையாக ஒரு நிர்வாகி நீக்கப்பட்டுள்ளார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமைக்கு விரோதமாக செயல்பட்டதற்காக அவரை ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

Rajini Makkal Mandram expelles its district secretary for the first time

அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினிகாந்த், 'ரஜினி ரசிகர் மன்றம்' என்று இருந்ததை 'ரஜினி மக்கள் மன்றம்' என்று மாற்றினார். உறுப்பினர்கள் சேர்க்கைக்காக இணையதளம் மற்றும் செயலியும் உருவாக்கப்பட்டது.

மேலும், மாவட்ட ரீதியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளிடம் கூட வீடியோ கான்பரசிங் மூலம் பேசினார் ரஜினிகாந்த். 'பதவி கிடைக்கவில்லை என்று யாரும் பொறாமையில் செயல்படக்கூடாது. தேவையற்ற சண்டைகளைத் தவிருங்கள்' என்று அறிவுரை வழங்கினார்.

இதுவரை 16 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட தம்புராஜ், அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி விஎம் சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலாளர் எஸ்.எம்.தம்புராஜ், ரஜினி மக்கள் மன்ற ஒற்றுமைக்கும் ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் முரணாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அவரை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாகத் தகுதி நீக்கம் செய்து, அவருடைய செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் நன்கு கண்காணித்து, அவருடைய செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில், அவருடைய பதவி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்து மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அவருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மற்ற எந்தவிதத்திலோ தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.ஆர்.அரவிந்த், மாவட்டச் செயலாளர் பணிகளையும் தற்காலிகமாக கூடுதலாகக் கவனிப்பார் என்பதை தெரிவித்துக்கொண்டு, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களும், அவருடன் ஒன்றுபட்டு செயல்படவும் ஒத்துழைக்கவும் அன்புத்தலைவர் ஒப்புதலின்படி அறிவுறுத்துகிறோம்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

English summary
For the very first time a district Secretary from Rajini Makkal Mandram has been expelled due to his anti - party activities.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X