»   »  ரஜினியின் மீட்டிங் மையமாக மாறி வரும் தனுஷ் வீடு.. !

ரஜினியின் மீட்டிங் மையமாக மாறி வரும் தனுஷ் வீடு.. !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் வீட்டிற்கு பதிலாக தனுஷின் வீட்டில் வைத்து தான் யாரையுமே சந்தித்து வருகிறாராம்.

போயஸ் கார்டன் என்றாலே நம் நினைவுக்கு வருவது முதல்வர் ஜெயலலிதாவின் வீடும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடும் தான். போயஸ் கார்டனுக்கு யாராவது சென்றாலே அது பரபரப்பு செய்தியாகிவிடுகிறது.

அவர்கள் இந்த இரண்டு வீடுகளில் எங்கு சென்றாலும் செய்தி தான்.

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட திருநாவுக்கரசர் இன்று ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தனுஷ் வீடு

தனுஷ் வீடு

திருநாவுக்கரசர் ரஜினியை போயஸ் கார்டன் வீட்டில் வைத்து அல்ல மாறாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷின் வீட்டில் வைத்து சந்தித்துள்ளார். ரஜினி அண்மை காலமாக யாராக இருந்தாலும் சரி அவர்களை தனுஷின் வீட்டில் வைத்து தான் சந்திக்கிறார்.

போயஸ் கார்டன்

போயஸ் கார்டன்

போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ரஜினி யாரையும் சந்திப்பது இல்லை. அவர் ஏன் போயஸ் கார்டன் வீட்டில் யாரையும் சந்திப்பது இல்லை என்று தெரியவில்லையே என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

டோணி

டோணி

தனது வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தை விளம்பரப்படுத்த கூல் கேப்டன் டோணி சென்னை வருகிறார். சென்னை வரும்போது அவர் ரஜினியை சந்திக்க உள்ளார். அப்படி என்றால் டோணியையும் தனுஷ் வீட்டில் வைத்து சந்திப்பாரோ ரஜினி?

English summary
Rajinikanth reportedly prefers to meet people at Dhanush' house rather than at his Poes garden residence.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil