»   »  பொண்டாட்டிடா வசனம் பேசிய பெண்ணுடன் போட்டோ எடுத்த கபாலிடா ரஜினி

பொண்டாட்டிடா வசனம் பேசிய பெண்ணுடன் போட்டோ எடுத்த கபாலிடா ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியை சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள லட்சம்பேர் போட்டி போட்டுக் கொண்டிருக்க ரஜினி ஒரு பெண்ணுடன் ஆர்வமாக போட்டோ எடுத்துக் கொண்ட தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமல்ல. ரஜினியின் கபாலி டயலாக்கை பொண்டாட்டிடா என்று பேசிய வைரல் ஆக்கிய பெண்தான்.

'கபாலிடா..." என்று 'கபாலி' டீஸரில் ரஜினி பேசிய வசனத்தை உலகம் முழுக்க பலகோடி மக்கள் பார்த்து ரசித்தனர். டப்ஸ்மாஷிலும் வைரலடித்தது அந்த வசனம்.

Rajini meets Pondatida girl

ஒரு பெண் 'பொண்டாட்டிடா..' என்று பேசி நெட்டில் பரவவிட்ட அந்த வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலானது. "பொண்டாட்டின்னா... பழைய படத்துல வரமாதிரி 'தழைய தழைய' பொடவை கட்டிகிட்டு... தல நெறய பூவ வெச்சிகிட்டு... நெத்தி நிறைய குங்குமம் வெச்சிகிட்டு... 'ஏ பொண்டாட்டி அப்படின்னு கூப்பிட்டா...' வந்து காலப் புடிச்சு சொல்லுங்க அத்தான்... அந்த மாதிரி பொண்டாட்டின்னு நெனச்சியா... பொண்டாட்டிடா...!!!" என அந்தப் பெண் பேசியது ஹிட் அடித்தது. அந்த வீடியோவை ரஜினியும் பார்த்து ரசித்தார்.

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய உடனே அந்த பெண்ணை சந்திக்க ஆசைப்பட்டார். ஆனால் உடல் நிலையை காரணம் காட்டி மருத்துவர்கள் யாரையும் சந்திக்க ரஜினிக்கு அனுமதி மறுத்து விட்டனர்.

இந்த நிலையில் கபாலிடா டயலாக் பேசிய அந்த பெண்ணுக்கு ரஜினி வீட்டிலிருந்து போன் வர, எதிர்முனையில் இருந்த பெண்ணுக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.

Rajini meets Pondatida girl

ரஜினியே லைனில் வந்து நேரில் பார்க்க விரும்புவதாகச் சொல்ல ஆனந்தத்தில் திக்குமுக்காடி விட்டார். அதன்படி சென்னை சேமியர்ஸ் சாலையில் இருக்கும் தனுஷ் வீட்டில் அந்த பெண்மணி ரஜினியை சந்தித்தார்.

ரஜினியை சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள லட்சம்பேர் போட்டி போட்டுக் கொண்டிருக்க ரஜினி ஆர்வமாக அந்த பெண்ணுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்

'கபாலிடா...' டயலாக்கை மாற்றி 'பொண்டாட்டிடா...' என்று பேசும் எண்ணம் எப்படி வந்தது.. இந்த டயலாக்கைக் கேட்டுவிட்டு உங்கள் உறவினர், நண்பர்கள் என்ன சொன்னார்கள் என்று ஆர்வமாக கேட்டாராம். ரஜினி. வைரல் வீடியோ டயலாக்கில் கணவர்களை கண்டபடி சகட்டுமேனிக்கு வெளுத்துக்கட்டிய ரஜினியைப் பார்த்த சந்தோசத்தில் வார்த்தைகள் வராமல் தவித்துப் போனாராம் அந்தப் பெண்.

English summary
Kabali Rajini met Pondatida girl in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil