»   »  ரஜினியின் புதிய படத் தலைப்பு கபாலி.. உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது!

ரஜினியின் புதிய படத் தலைப்பு கபாலி.. உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் புதிய படத் தலைப்பான கபாலி உலக அளவில் இன்று ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது.

இந்திய சினிமாவின் அடையாளம் என அழைக்கப்படும் ரஜினிகாந்த், லிங்கா படத்துக்குப் பிறகு மெட்ராஸ் இயக்குநர் ரஞ்சித் இயக்குநர் புதிய படத்தில் நடிக்கிறார்.இந்தப் படத்தில் அவருடன் முற்றிலும் புதிய முகங்களாக, எந்த வகையிலும் வணிக மதிப்பற்ற கலை, தினேஷ், ராதிகா ஆப்தே போன்றவர்கள் நடிக்கிறார்கள்.


இந்தப் படத்துக்கு முதலில் காளி, பிறகு கண்ணபிரான் என தலைப்பிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.


இப்போது அந்தப் படத்துக்கு கபாலி என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


கபாலி என்ற பெயர் மயிலாப்பூர் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் பிரபலமாக உள்ள பெயராகும். மயிலையில் சில ஆண்டுகள் முன்பு வரை கபாலி என்ற பெயரில் ஒரு திரையரங்கம் நடந்து வந்தது. உலகப் புகழ் பெற்ற கபாலீஸ்வரர் கோயில் உள்ளதும் இங்குதான்.


கபாலி என்ற பெயரில் வாழ்ந்த நிஜ தாதாவின் கதைதான் இந்தப் படம் என்றும் சொல்கிறார்கள்.


இந்தத் தலைப்பை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் கபாலி என்பது உலக அளவில் ட்ரெண்டிங்கானது.


இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் கபாலி என்பது காமெயன் அல்லது காமெடி வில்லனின் பெயராக மட்டுமே இருந்தது. முதல் முறையாக இந்த கபாலி என்ற பெயர் நாயகனின், அதுவும் ஒரு சூப்பர் ஸ்டாரின் பெயராக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது!


English summary
Rajini's New film title Kabali is becoming worldwide trending in social networks today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil