»   »  "கண்ணுக்கு குளிர்ச்சியாய்” கலர் கலர் ஆடைகள்... “ரஜினிமுருகன்” காஸ்ட்யூம்ஸின் வண்ணப் பின்னணி!

"கண்ணுக்கு குளிர்ச்சியாய்” கலர் கலர் ஆடைகள்... “ரஜினிமுருகன்” காஸ்ட்யூம்ஸின் வண்ணப் பின்னணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி முருகன்... சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் படம் இது.

ஒருவகையில் லேட்டாக வெளியானாலும், லேட்டஸ்டாக வசூலைக் குவித்து வருகின்றது இந்தத் திரைப்படம். இந்நிலையில் ஜல்லிக்கட்டு தடை குறித்த காமெடி காட்சிகளையும் சரியான இடத்தில் திணித்துள்ளனர்.


அதையும் தாண்டி இந்தப் படத்தில் அனைவரது கண்களையும் ஈர்த்தது சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தியின் உடைகள்தான்.


வைபரண்ட் லுக்கில் சிவா:

வைபரண்ட் லுக்கில் சிவா:

சிவகார்த்திகேயனுக்கு முழுக்க, முழுக்க வைபரண்ட் கலர் சட்டைகள்தான். அதிலும் அரக்கு, கிளிப்பச்சை, கரும்பச்சை என ஆர்ம்ஸ் வரை மடக்கிவிடப்பட்ட சட்டையில் மெல்லிய பார்டர் காண்ட்ராஸ்ட் கலரில் வைக்கப்பட்டு தைக்கப்பட்டுள்ளது.


சத்யாவின் கைவண்ணம்:

சத்யாவின் கைவண்ணம்:

சத்யா என்.ஜே காஸ்ட்யூம் டிசைனராக பங்காற்றி இந்தப் படத்திற்காகவே 30 சட்டைகளை வடிவமைத்தாராம். அதன் விளைவு படம் முழுக்க சிவகார்த்திகேயன் ஜொலிக்கிறார். கீர்த்தியின் அழகோ மிரட்டுகிறது.


பக்கத்து வீட்டு பொண்ணு:

பக்கத்து வீட்டு பொண்ணு:

சிவாவிற்கு இப்படி என்றால், கீர்த்தி அய்யோ.. பக்கத்து வீட்டு பெண் போல பளீரிடுகின்றார். அவர் அறிமுக காட்சியில் அணிந்திருக்கும் ஊதா நிற கண்ணைப் பறிக்கும் ராஜஸ்தானி டைப் ஸ்கர்ட்டிலேயே சிவா மட்டுமல்ல நாமும் அவர் மீது இருந்து கண்களை எடுக்க முடியாமல் திணறுகின்றோம்.
கச்சிதமான ஆடைகள்:

கச்சிதமான ஆடைகள்:

"ஆவி பறக்கும் டீக்கடை" பாடல் முழுவதும் அழகழகான "நியான்" கலர்கள் நிறைந்த சுரிதார்களில் கச்சிதமாக வந்து மனதினை களவாடி செல்கிறார் கீர்த்தி.
அசத்தல் வண்ணக்கலவைகள்:

அசத்தல் வண்ணக்கலவைகள்:

உன் மேல ஒரு கண்ணு பாடலில் அவருடைய கிளிப்பச்சை, ரோஸ் நிற புடைவை காம்பினேஷன் அட்டகாசம். பொதுவாக இந்த நிறங்களில் அணிந்தால் "பஞ்சு மிட்டாய் விக்கிறியா" என்று கேட்பார்கள். ஆனால், கீர்த்தியோ அந்தக் கலர் காம்பினேஷனில் அசத்துகிறார்.


கலர்புல் கலர் விருந்து:

கலர்புல் கலர் விருந்து:

நடுவில், கீர்த்தியின் ஹோட்டல் மேனேஜர் யூனிபார்ம் உடையைக் கூட கன கச்சிதமாக வடிவமைத்துள்ளார் ஆடை வடிவமைப்பாளார் சத்யா. படம் முழுவதும் நியான் கலர் ஆடைகளே ஆக்கிரமித்து "கலர்புல்" திருவிழா மோடை படத்திற்கு அளித்துள்ளது. ஆகவே, படம் பார்க்க மனைவியை அழைத்துப் போகும் கணவர்கள் ஜாக்கிரதை...வெளியில் வந்தபின்னர் பர்ஸ் வெயிட் குறைஞ்சா நாங்க பொறுப்பில்லை!


English summary
Rajini murgan not only won box office also won the hearts of people with its best costumes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil