»   »  ரஜினி முருகனும்... ஏழரை மூக்கனும்...

ரஜினி முருகனும்... ஏழரை மூக்கனும்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி முருகனைப் பார்க்க நம்பி வாங்க... சந்தோசமா போங்க... என்று கூப்பிடுகிறார்கள். சரி லீவுல சும்மாத்தானே இருக்கோம் போய்ட்டு வருவோம் என்று நம்பி போனவர்களை சீன் பை சீன் ரசிக்க வைத்திருக்கிறான் ரஜினி முருகன்.

மணக்க மணக்க மதுரைப் பாட்டில் தொடங்கி... கத்தியில்லாத ரத்தமில்லாத மதுரையில் எடுத்த படம்தான் ரஜினி முருகன். ரஜினி மீது வெறித்தனமாக பக்தி கொண்டிருக்கும் வக்கீல் தனது நண்பனின் மகனுக்கு ரஜினி முருகன் பெயர் வைக்க படத்தின் தலைப்பு தீர்மானமாகிறது.


நல்ல நட்பு சின்ன சண்டையில் பிரிவது மதுரை பக்கத்தில் சாதாரண விசயம்தான். நீதாண்டா என் மாப்பிள்ளை என்று கூப்பிட்ட வாயாலேயே நீ தெருவிலதாண்டா நிப்பே என்று சொன்னதில் இருந்து நண்பர்கள் பிரிகிறார்கள். ரஜினிமுருகன் தன் வக்கீல் மாமாவை சமாதானம் செய்து தன் காதலியை எப்படி திருமணம் செய்து கொள்கிறான் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.


சிவகார்த்திக்கேயன் - கீர்த்தி சுரேஷ்

சிவகார்த்திக்கேயன் - கீர்த்தி சுரேஷ்

முறைப்பெண் கீர்த்தி சுரேஷை விரட்டி விரட்டி காதலிக்கும் சிவகார்த்திக்கேயனை ஒரு பக்கம் அப்பாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு சிவகார்த்திக்கேயனை தவிக்க விட்டாலும் மறுபக்கம் கண்ணாலேயே ஓகே சொல்வதுமாக அழகாக ரொமான்ஸ் செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தங்க தமிழக ரசிகர்களுக்கு அழகான பாந்தமான கதாநாயகி கிடைத்துவிட்டார்.


லாஜிக் பாக்கவேணாம்

லாஜிக் பாக்கவேணாம்

இவளுங்க ஏன் நம்மளை சும்மா சும்மா திட்ராளுங்க என்று சிவகார்த்திக்கேயன் கேட்க திருந்திருவோமாம்மா என்று பரோட்டா சூரி பதில் சொல்வதும்தான்காமெடி படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பார்கள். தியேட்டருக்கு போனோமா டிக்கெட் வாங்கி படத்தைப் பார்த்து சிரித்தோமா என்று வரவேண்டும். தேவையில்லாத ஆராய்ச்சி எல்லாம் காமெடி படங்களுக்கு தேவையில்லை என்பார்கள். ரஜினி முருகன் படத்திற்கும் இது பொருந்தும் என்பது உண்மைதான்.


கொஞ்சம் ஏமாற்றம்

கொஞ்சம் ஏமாற்றம்

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் என்று ரஜினி பஞ்ச் டயலாக் போலவே ரிலீஸ் ஆவதற்கு ஏற்பட்ட பல சிக்கல்களைத் தாண்டி வந்த ரஜினி முருகன் படமும் சினிமா ரசிகர்களை ஏமாற்றவில்லை என்றுதான் கூற வேண்டும். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் டீம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடுதலாகத்தான் இருந்தது. ஆனாலும் கொஞ்சம் ஏமாற்றம்தான்.


தாத்தா ராஜ்கிரன்

தாத்தா ராஜ்கிரன்

ஹெட்மாஸ்டர் மகனாக இருந்தும் படித்து விட்டு வேலை வெட்டியில்லாமல் இருக்கம் ரஜினிமுருகனும்... பணக்காரர்களை மிரட்டி பணம் பறிக்கும் ஏழரை மூக்கனும் ஒரு கட்டத்தில் மோத அதுதான் படத்திற்கான கதையை நகர்த்துகிறது. செட்டில் ஆகாமல் ஊரைச் சுற்றும் பேரன் ரஜினிமுருகனுக்காக பலகோடி ரூபாய் மதிப்புள்ள பரம்பரை வீட்டை விற்று சொத்துக்களை பிரித்துக் கொடுக்க நினைக்கும் தாத்தா ராஜ்கிரண் இந்த படத்தில் அதிகம் ஸ்கோர் செய்திருக்கிறார்.


சூரியின் ஜோடியான ஆன்டிரியா

சூரியின் ஜோடியான ஆன்டிரியா

நண்பன் சூரியை கொஞ்சம் டீலில் விட்டுவிட்டார் சிவகார்த்திக்கேயன். டீக்கடை, ரியல் எஸ்டேட் என கூட்டுத்தொழில் ஆரம்பித்து, வெள்ளைக்காரி ஆன்டிரியாவை கரெக்ட் செய்தது வரை சூரி இந்த படத்தில் காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார் ஆனால் ரசிகர்களால்தான் ரசிக்க முடியவில்லை.
ஏழரை மூக்கன்

ஏழரை மூக்கன்

சுப்ரமணியபுரத்தில் நல்ல வில்லன் சமுத்திரகனிக்கும் ரஜினி முருகனில் ஏழரை மூக்கனாக நடித்த சமுத்திரகனிக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. ரத்தம் சொட்டச் சொட்ட சிவகார்த்திக்கேயன், ராஜ்கிரண் கோஷ்டியிடம் அடி வாங்கியும் அசால்டாக செல்போனில் பேசிக்கொண்டு செல்வதுமாக அசத்தியிருக்கிறார். ஆனாலும் சமுத்திரகனியை வில்லனாக ஏற்றுக்கொள்ள மனசு ஒப்புக்கொள்ளவில்லை.


நம்பி போகலாம்

நம்பி போகலாம்

முதல் சீன் தொடங்கி கடைசியில் ராஜ்கிரணின் இன்னொரு பேரன் போஸ்பாண்டியாக சிவகார்த்திக்கேயன் வருவதை எதையும் மிஸ் செய்யாமல் பார்க்கின்றனர் ரசிகமாக ஜனங்கள். இமானின் இசையில் எல்லா பாடல்களும் கேட்ட ரகமாக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. ரஜினி முருகன் நாயகி கீர்த்தி சுரேஷை ரசிக்க ரசிக்க எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். நம்பி போகலாம்... லேட்டாக வந்த ரஜினி முருகன் லேட்டஸ்ட் ஆக ஸ்கோர் செய்து பொங்கல் ரேஸில் முந்தியது இதனால்தான்.ரஜினி முருகன் படத்தின் வெற்றி சிவகார்த்திக்கேயனுக்கு நிம்மதியான தூக்கத்தையும், தயாரிப்பாளரும் இயக்குநருமான என்.லிங்குசாமிக்கு மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கும்.


English summary
Rajini Murugan is his second outing with director Ponram, who made his debut with the hugely successful Varuthapadatha Valibar Sangam, also starring Sivakarthikeyan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil