»   »  செப்டம்பர் 17ம் தேதி புலி வரல, ரஜினி முருகன் வருகிறார்

செப்டம்பர் 17ம் தேதி புலி வரல, ரஜினி முருகன் வருகிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரஜினி முருகன் படம் வரும் செப்டம்பர் மாதம் 17ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், சூரி, ராஜ்கிரண் உள்ளிட்டோரை வைத்து பொன்ராம் எடுத்துள்ள படம் ரஜினி முருகன். சூரி, சிவா கலாய்ச்சிபை செய்யும் இந்த படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ். நஸ்ரியா நடிக்கிறார், சமந்தா நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இறுதியில் படத்தில் நடித்துள்ளது கீர்த்தி தான். படத்தை லிங்குசாமி தயாரித்துள்ளார்.

படப்பிடிப்பு வேலைகள் கடந்த மார்ச் மாதமே முடிந்துவிட்டது. இதையடுத்து படம் ஜூலை 17ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது.

தள்ளிப்போனது

தள்ளிப்போனது

ஜூலை 17ம் தேதி ரஜினி முருகன் வருவார் என்று ரசிகர்கள் ஆவலோடு இருக்கையில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

ரிலீஸ்

ரிலீஸ்

ரஜினி முருகன் ரிலீஸ் தேதி தள்ளிப் போன பிறகு படம் எப்பொழுது வெளியாகும் என்ற தகவலே இல்லாமல் இருந்தது. எப்ப தான் இந்த படத்தை ரிலீஸ் பண்ணுவாங்கன்னு தெரியலேயே என ரசிகர்களும் குழம்பினர்.

செப்டம்பர் 17

செப்டம்பர் 17

ரஜினி முருகன் படத்தை செப்டம்பர் மாதம் 17ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். ஜூலை 17ம் தேதி ரிலீஸாக வேண்டிய படம் தற்போது ரிலீஸாக உள்ளது.

புலி

புலி

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படம் செப்டம்பர் 17ம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் திடீர் என படத்தின் ரிலீஸை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர். இந்நிலையில் தான் புலி வர வேண்டிய தேதியில் ரஜினி முருகன் படம் ரிலீஸாகிறது.

English summary
Sivakarthikeyan's Rajini Murugan is reportedly hitting the screens on september 17th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil