»   »  'வசூல் ராஜா'வாக மாறியது 'ரஜினி முருகன்'.. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா!

'வசூல் ராஜா'வாக மாறியது 'ரஜினி முருகன்'.. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனுக்கு இது மறக்க முடியாத பொங்கல். அவரது ரஜினி முருகன் மிகப் பெரிய சூப்பர் ஹிட் என்று திரைப்பட வல்லுநர்கள் கூறி விட்டார்கள். திரையிட்ட இடமெல்லாம் இப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.

பாலாவின் தாரை தப்பட்டை அதற்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளதாகவும், கெத்து மற்றும் கதகளி ஆகிய படங்கள் அதற்கு அடுத்த நிலையில் இருப்பதாகவும் திரையரங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த வருடத்தின் மிகப் பெரிய ஹிட்டாக ரஜினி முருகன் அமைந்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் ஒரே குரலில் உரத்த குரலில் உற்சாகக் குரலில் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பொங்கல் ரிலீஸ்...

பொங்கல் ரிலீஸ்...

பொங்கல் பண்டிகையையொட்டி ரஜினி முருகன், தாரை தப்பட்டை, கெத்து, கதகளி ஆகிய நான்கு படங்கள் வெளியாகின. இவற்றில் அதிக எதிர்பார்ப்பு ரஜினி முருகனுக்கும், தாரை தப்பட்டைக்கும் இருந்தது.


என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா...

என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா...

தயாராகி நீண்ட காலமாக திரையிடப்படாமல் நிலுவையில் இருந்து வந்த படம் ரஜினி முருகன். மேலும் அப்படத்தில் இடம் பெற்றிருந்த என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா என்ற பாடலும், அந்தப் பாட்டுக்கு முன்பு சிவகார்த்திகேயன் பேசும் வசனமும் வெகு பிரபலமாகி விட்டிருந்தன. எனவே எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.


பொன்ராம்...

பொன்ராம்...

மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இயக்குநர் பொன்ராம் இப்படத்தையும் இயக்கியிருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிக உற்சாகத்தை இந்தப் படம் ரசிகர்களுக்குக் கொடுத்து விட்டது.


வருத்தப்படாத வாலிபர் சங்கம்...

வருத்தப்படாத வாலிபர் சங்கம்...

உண்மையைச் சொன்னால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் அளவுக்கு இருக்கும் என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதை விட 2 மடங்கு அதிக அலப்பறைகளுடன் படம் பட்டையைக் கிளப்பும் வகையில் இருப்பதால் படம் மக்களை படு சீக்கிரமாகவே ரீச் ஆகி விட்டது.


காமெடி படம்...

காமெடி படம்...

முதல் காட்சியிலிருந்து கடைசிக் காட்சியில் என்ட் கார்டு போடும் வரை விடாமல் சிரிக்க வைத்த ஒரே படம் இதுவாகத்தான் இருக்க முடியும் சமீப காலத்தில். படத்தில் இடம் பெற்ற அத்தனை கேரக்டர்களும் மக்களின் மனதுக்குள் ஊடுறுவி கிச்சு கிச்சு காட்டி விட்டனர்.


அசத்தல் கேரக்டர்ஸ்...

அசத்தல் கேரக்டர்ஸ்...

ஹீரோ சிவகார்த்திகேயனாகட்டும், ஹீரோயின் கீர்த்தி சுரேஷாக இருக்கட்டும், முரட்டு மீசைகளுடன் வலம் வரும் பஞ்சாயத்து பார்ட்டிகளாகட்டும், கீர்த்தி சுரேஷின் அப்பாவாகட்டும், சிவகார்த்திகேயனின் அப்பா ஞானசம்பந்தனாகட்டும்... அத்தனை கேரக்டர்களும் அசத்தியுள்ளனர்.


ராஜ்கிரண்...

ராஜ்கிரண்...

ராஜ்கிரண் பற்றிச் சொல்லவே வேண்டாம். கடைசி காட்சியில் என் பேரனை அடிதடிக்குப் போக வேண்டாம்னுதான் சொல்லியிருக்கேன். அடிக்கக் கூடாதுன்னு சொல்லலை என்று சொல்ல, அதற்கு சிவகார்த்திகேயன் அப்படியா தாத்தா என்று கேட்க, அதற்கு ராஜ்கிரண் தோள்களை குலுக்கி ம் என்று ஸ்டைலாக சொல்லும்போது தியேட்டரே எழுந்து நின்று சிரித்தது மிகப் பெரிய ஆச்சரிய காட்சி.


சூப்பர் சீன்...

சூப்பர் சீன்...

அதேபோல பிணமாகக் கிடக்கும் ராஜ்கிரண் சடாரென்று எழுந்து உங்க அப்பத்தாளை நானாடா வச்சிருந்தேன் என்று கோபத்துடன் கொந்தளித்துக் கேட்கும் காட்சியில் தியேட்டரே குபீர் சிரிப்பில் குதூகலித்தது சமீபத்திய திரையுலக வரலாறு கண்டிராத காட்சி.


வயிறு வலி கன்பார்ம்...

வயிறு வலி கன்பார்ம்...

இப்படி படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை வசனத்தால் வெளுத்து வாங்கி வட்டார்கள் இப்படத்தில். குடும்பத்தோடு போய் வயிறு வலிக்கச் சிரித்து வயிற்று வலியோடு தியேட்டரை விட்டு ரசிகர்கள் வருவது பார்க்கவே சந்தோஷம்தான்.


காமெடி மருந்து...

காமெடி மருந்து...

அடித்து உடைத்து எலும்பை அள்ளிப் போடும் படங்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட படம் மக்களுக்கு மிகப் பெரிய ஊட்டச்சத்து என்பதில் சந்தேகம் இல்லை. இதனால்தான் ரஜினி முருகன் பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரிய ஹிட்டாகவும், வசூலைக் குவிக்கும் படமாகவும் மாறியுள்ளது.


தாரை தப்பட்டை...

தாரை தப்பட்டை...

வன்முறை கலந்த படம் என்று தெரிந்தே வெளியாகியுள்ளதால் தாரை தப்பட்டையால் மக்கள் அதிரவில்லை. இப்படம் வசூல் ரீதியில் பார்த்தால் 2வது இடத்தில் இருக்கிறதாம். படத்தின் இசை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளுடன் தாரை தப்பட்டையும் ஓடி வருகிறது.


வெற்றிப்படம்...

வெற்றிப்படம்...

இதேபோலத்தான் கெத்து, கதகளி ஆகிய படங்களும் ஓடி வருகின்றன. நான்கு படங்களும் அரங்கு நிறைந்த காட்சிகள் என்றாலும் கூட தெளிவான வெற்றிப் படம் ரஜினி முருகன் என்று அத்தனை பேருமே கூறி விட்டனர்.


குழப்பம்...

குழப்பம்...

மேலும் ஒரே சமயத்தில் நான்கு படங்கள் வந்ததால் பல தியேட்டர்களுக்கு எந்தப் படத்தை திரையிடுவது என்பதில் சிக்கலாகி விட்டதாம். சென்னை, கோவை, மதுரை போன்ற மல்ட்டிபிளக்ஸ் உள்ள ஊர்களில் இந்த சிக்கல் வரவில்லை. அதேசமயம், இதுபோல பல தியேட்டர்கள் அடங்கிய வளாகங்கள் இல்லாத ஊர்களில்தான் எந்தப் படத்தைப் போடுவது என்பதில் குழப்பமாகி விட்டதாம்.


தியேட்டர்கள் அதிகரிப்பு...

தியேட்டர்கள் அதிகரிப்பு...

ரஜினி முருகன் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருப்பதாலும், மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளதாலும், பல ஊர்களில் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். பலர் மற்ற படத்தைக் குறைத்து விட்டு ரஜினி முருகனைப் போட்டு வருகிறார்களாம்.


English summary
Among Pongal release movies Siva karthikeyan's Rajini murugan is top in the box office collection.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil