»   »  'வ.வா.சங்கம் ரிட்டர்ன்ஸ்' ரஜினிமுருகனைக் கொண்டாடும் ரசிகர்கள்

'வ.வா.சங்கம் ரிட்டர்ன்ஸ்' ரஜினிமுருகனைக் கொண்டாடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ரஜினிமுருகன்.

பொன்ராம் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் இப்படத்தின் மூலம் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது.


பலமுறை தள்ளிப்போன ரஜினிமுருகன் இந்த பொங்கலுக்கு வெளியாகியிருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் நிறைவேற்றியதா? என்பதை பார்க்கலாம்.


வசீகரிக்கும் காமெடி

"ரஜினிமுருகன் முழுக்கவே காமெடி கலந்து ரசிகர்களை வசீகரிக்கும் விதமாக உள்ளது. சிவகார்த்திகேயன், சூரி, பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்க கூட்டணி மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்றிருக்கிறது" என்று ஜெய சூர்யா கூறியிருக்கிறார்.


ரசிகர்களை ஈர்க்கிறது

"ரஜினிமுருகன் இடைவேளை நெருங்கி விட்டது. படம் ரசிகர்களை நன்றாக ஈர்க்கிறது குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் கூட்டணி ரஜினிமுருகனில் மீண்டிருக்கிறது" என்று அண்ணாச்சி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.


கீர்த்தி சுரேஷ்

"ரஜினிமுருகன் முதல் பாதி முடிந்தது. நல்ல பொழுதுபோக்கு படமாக ரஜினிமுருகன் இருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படத்திற்குப் பின் கீர்த்தி சுரேஷுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும்" என்று ஹரிஷ் தெரிவித்திருக்கிறார்.


2 வது பாதி

"நான் சிறிது நேரத்திற்கு முன்னர் ரஜினிமுருகன் பி மற்றும் சி கிளாஸ் ரசிகர்களுக்கான படமென்று நினைத்தேன். ஆனால் 2 வது பாதி மெதுவாக ஏ கிளாஸ் ரசிகர்களையும் இணைத்து ஒரு பாடத்தை அளிக்கிறது" என்று தினேஷ் தெரிவித்திருக்கிறார்.


கத்தி

"கத்தி படத்தின் ப்ளு பிரிண்ட் காட்சியை ரஜினிமுருகனில் பயன்படுத்தி இருக்கின்றனர். தளபதியை மேற்கோள் காட்டியிருக்கின்றனர் போடு தகிட தகிட" என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் ரோமியோ.


English summary
Sivakarthikeyan, Keerthy Suresh Starring Rajinimurugan Today Released Worldwide, Written and Directed by Ponram - Audience Live Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil