»   »  லிங்குசாமிக்கு கைகொடுத்த மும்பை நிறுவனம்... பொங்கலுக்கு உறுதியானது ரஜினிமுருகன்

லிங்குசாமிக்கு கைகொடுத்த மும்பை நிறுவனம்... பொங்கலுக்கு உறுதியானது ரஜினிமுருகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிமுருகனால் தொடர்ந்து சிக்கலில் சிக்கி தவித்து வந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு, மும்பையைச் சேர்ந்த பென் மூவிஸ் நிறுவனம் தற்போது உதவி செய்ய முன்வந்திருக்கிறது.

இதன் மூலம் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.


மேலும் தினசரிகளின் விளம்பரங்களில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து பென் மூவிஸ் நிறுவனத்தின் லோகோவும் பளிச்சிடுகிறது.


ரஜினிமுருகன்

ரஜினிமுருகன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாபெரும் வெற்றி பெற்றதால் சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர் பொன்ராம் மற்றும் இசையமைப்பாளர் இமான் நால்வரும் இணைந்த ரஜினிமுருகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ரஜினிமுருகன் மீதுள்ள நம்பிக்கையால் திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி இந்தப் படத்தை வாங்கி வெளியிட முன்வந்தார்.


தொடர்ந்து சிக்கல்

தொடர்ந்து சிக்கல்

கடந்த செப்டம்பர் மாதமே திரைக்கு வரவேண்டிய ரஜினிமுருகன் படம் லிங்குசாமிக்கு ஏற்பட்ட கடன் தொல்லைகள் காரணமாக தொடர்ந்து தள்ளிப் போனது.கடைசியாக டிசம்பர் மாதம் 4ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மழை, வெள்ளம் காரணமாக மீண்டும் ரஜினிமுருகன் தள்ளி வைக்கப்பட்டது.
நிறுத்தப்பட்ட விளம்பரம்

நிறுத்தப்பட்ட விளம்பரம்

ஒருவழியாக பொங்கல் தினத்தில் ரஜினிமுருகன் வெளியாகும் என்று தினசரிகளில் படக்குழுவினர் விளம்பரம் அளித்து வந்தனர். ஆனால் சில நாட்களாக இந்த விளம்பரம் நிறுத்தப்பட்டதால் படம் பொங்கலுக்கு வெளியாகுமா? என்ற சந்தேகம் விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
கைகொடுத்த பென் மூவிஸ்

கைகொடுத்த பென் மூவிஸ்

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பென் மூவிஸ் நிறுவனம் தற்போது ரஜினிமுருகன் படத்திற்கு உதவிசெய்ய முன்வந்திருக்கிறது.லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பென் மூவிஸ் ரஜினிமுருகனை வெளியிடுகிறது. பென் மூவிஸ் லோகோவுடன் ரஜினிமுருகன் படத்தை தற்போது படக்குழுவினர் விளம்பரம் செய்து வருகின்றனர்.
பையா

பையா

பாலிவுட் படங்களை வாங்கி விநியோகம் செய்து வரும் நிறுவனம் தான் இந்த பென் மூவிஸ். மேலும் லிங்குசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் பையா படத்தின் இந்தி ரீமேக்கையும் பென் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Linguswamy's Thirupathi Brothers who constantly seeks to be stuck on a problem, the Mumbai-based Pen Films has now come Forward to help. Now Sivakarthikeyan's Rajini Murugan has been Confirmed to be Released in the coming Pongal Day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil