»   »  என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா... டிசம்பர் 11ம் தேதியாவது ரிலீசாகுமா ரஜினி முருகன்?

என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா... டிசம்பர் 11ம் தேதியாவது ரிலீசாகுமா ரஜினி முருகன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள ரஜினி முருகன் படம் வரும் டிசம்பர் 11ம் தேதி ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள படம் ரஜினி முருகன். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பெரும் வெற்றியடைந்தது. எனவே, இப்பட ரிலீசை மக்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.


படவேலைகள் முடிவடைந்த நிலையில், ரிலீஸ் தேதி மட்டும் பல்வேறு காரணங்கள் தள்ளிப்போய் வருகிறது. ஏற்கனவே, பலமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டு, பின்னர் அவை மாற்றப்பட்டன.


டிசம்பர் 11ம் தேதி...

டிசம்பர் 11ம் தேதி...

இந்நிலையில், தற்போது ‘ரஜினி முருகன்' படம் வருகிற டிசம்பர் 11-ந் தேதி வெளியாகவிருப்பதாக சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பணப்பிரச்சினை...

பணப்பிரச்சினை...

இப்படத்தை லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். பண பட்டுவாடா பிரச்சினைகளால் தான் பட ரிலீஸ் தாமதமானதாகவும், தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டதால் கண்டிப்பாக டிசம்பர் 11ம் தேதி படம் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது.


கீர்த்தி சுரேஷ்...

கீர்த்தி சுரேஷ்...

இந்தப் படத்தில் சிவகார்த்திக்கேயனின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதுவே அவர் அறிமுகமான முதல்படம். ஆனால், இப்பட ரிலீஸ் தள்ளிப் போனதால் கீர்த்தி சுரேஷ் நடித்த இது என்ன மாயம் படம் முதலில் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.


என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா...

என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா...

இமான் இசையமைத்துள்ள ரஜினி முருகன் பட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக, ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா' பாடல் அதிகம் பிரபலமாகியுள்ளது.


English summary
If the on going buzz is to be believed actor Sivakarthikeyan's Rajini murugan movie is likely to be released on December 11.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil