»   »  பொங்கலுக்கு தள்ளிப் போன ரஜினி முருகன்... விடாமல் விரட்டிய வெள்ளம்

பொங்கலுக்கு தள்ளிப் போன ரஜினி முருகன்... விடாமல் விரட்டிய வெள்ளம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி பல்வேறு சிக்கல்களால் திரைக்கு வர முடியாமல் உள்ள 'ரஜினிமுருகன்' திரைப்படம் ஒருவழியாக பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரஜினிமுருகன் படம் முன்னதாக டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து போஸ்டர்களை வெளியிட்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக மழை வெள்ளம் ஏற்பட்டதால் படத்தின் வசூல் நிலையை கருதி மீண்டும் படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் மாற்றியுள்ளதாக தெரிவித்தனர். ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினர்.


கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மூலம் சூப்பர்ஹிட்டான பாடல்களை கொடுத்த இமான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.


டிசம்பர் மாத ரிலீஸ்

டிசம்பர் மாத ரிலீஸ்

ரஜினி முருகன் படத்தை ரிலீஸ் செய்வதில் கடும் சிக்கல் நீடித்தது. சில பல பஞ்சாயத்துக்கள் முடிந்து டிசம்பர் மாதம் 4ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படமும் அதர்வா நடித்த ஈட்டி படமும் டிசம்பர் 4ம்தேதி அன்று ரிலீசுக்கு தயார் ஆக இருந்தது.


ஈட்டியுடன் மோத தயாரான முருகன்

ஈட்டியுடன் மோத தயாரான முருகன்

சென்னையில் எதிர்பாராதவிதமாக பெய்த கனமழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பல லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் குடியேறினர். திரைப்பட படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.


பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

தற்போது மழை நின்று இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் சற்று திரும்பிய நிலையில், இன்று டிசம்பர் அதர்வாவின் ஈட்டி படம் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ஜனவரி 14ம் தேதி பொங்கல் அன்று சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள் படக்குழுவினர்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில், ரஜினிமுருகன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் தெரிவித்து மீண்டும் புதிய ரிலீஸ் தேதியுடன் போஸ்டர் வெளியிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.


English summary
Tirupathi brothers officially announced Rajini Murugan relese on January 14.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil