»   »  ரஜினியை சந்தித்த ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்

ரஜினியை சந்தித்த ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ரிட்டர்ச் கெரே தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசினார்.

இந்தியாவின் கலாச்சாரம், வழிபாட்டு முறைகள், புத்த மதம் ஆகியவற்றை நேசிப்பவரான ரிச்சர்ட் இந்தியாவுக்குப்புதியவரல்ல.

கெரே அறக்கட்டளை மூலம் இந்தியாவில் பல சமூக சேவை அமைப்புகளுக்கு சத்தமில்லாமல் உதவி செய்துவருபவர். இப்போது இந்தியாவில் எய்ட்ஸைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு கை கொடுக்க முன்வந்துள்ள ரிச்சர்ட் கெரே இதற்காக தமிழக நடிகர்கள், நடிகைளின் ஆதரவையும் கோரியுள்ளார்.

சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரியின் வீட்டில் வைத்து பிரசாந்த், குஷ்பு, ஷோபனா, ரோகினிஆகியோரை சந்தித்த ரிச்சர்ட் பின்னர் ரஜினியை சந்திக்க விரும்ப அவரை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கேஅழைத்து விருந்து கொடுத்தார் ரஜினி.

இதையடுத்து பைவ் ஸ்டார் ஹோட்டலில் வைத்து சூர்யா, விஜய், விவேக், ரேவதி, மாதவன், பாரதிராஜாஆகியோரையும் தனியே சந்தித்துப் பேசினார்.

எய்ட்ஸ் விஷயத்தில் அமெரிக்கா செய்த அதே தவறுகளை இந்தியாவும் செய்துவிடக் கூடாது என்றுநினைக்கிறேன் என்று அழுத்தமாகவே இந்தச் சந்திப்புகளின்போது கூறினாராம் ரிச்சர்ட். இந்தியா எய்ட்ஸ்பிடியிலிருந்து மீள நாம் அனைத்து வகைகளிலும் உதவ வேண்டும் என்றாராம்.

இந்தியாவிலேயே எய்ட்ஸ் பாதிப்பு அதிகமுள்ள 6 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இங்கு சினிமாவுக்கு மவுசுஅதிகம் என்பதால் இந்த நோய் குறித்து விழிப்புணர்வை உருவாக்க நடிக, நடிகைகளை ஈடுபடுத்துவதே சரியானவழி என்று இவருக்கு யோசனை சொன்னது கோத்ரேஜ் நிறுவன அதிபர் பரமேஸ்வர் கோத்ரேஜாம்.

அவரே தான் ரிச்சர்டை சென்னைக்கும் அழைத்து வந்து நடிகர்களை சந்திக்க வைத்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil