»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பா.ஜ.க. கூட்டணியில் அதிமுக சேராவிட்டால், தனியாகவே போட்டியிட முடிவு செய்துள்ள பா.ஜ.க., தங்களுக்குஆதரவாக தேர்தல் பிராச்சாரம் செய்ய ரஜினியை இழுக்க முயன்று வருகிறது.

துக்ளக் ஆசிரியரும், பா.ஜ.கவால் மாநிலங்களவை எம்.பியாக நியமிக்கப்பட்டவருமான சோ மூலமாக இந்தமுயற்சி நடக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக, மதிமுக விலகியதையதையடுத்து, கூட்டணியில் சேருமாறு அதிமுகவுக்குபா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்தவண்ணம் உள்ளனர். அதற்கு அதிமுக தரப்பில் இருந்து எந்தவிதசாதகமான பதிலும் இதுவரை வரவில்லை.

ஒருவேளை கூட்டணிக்கு முதல்வர் ஜெயலலிதா மறுத்துவிட்டால், தமிழகத்தில் பா.ஜ.க. தனித்து விடப்படும் நிலைஏற்படும். மதமாற்றத் தடைச் சட்டம், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஆதரவு போன்ற நடவடிக்கைகளால்கணிசமான அளவு இந்துத்துவா ஆதரவு ஓட்டுக்களை ஜெயலலிதா கவர்ந்துள்ளார்.

இதனால் பா.ஜ.க- அதிமுக தனித்துப் போட்டியிட்டால், தங்களது ஆதரவு ஓட்டுக்களிலேயே ஒரு பிரிவை அதிமுகஇழுத்துவிடும் என்ற அச்சம் பா.ஜகவிடம் உள்ளது.

இந் நிலையில் தனித்துப் போட்டியிட்டால் டெபாஸிட் கூட கிடைக்காது என்ற அச்சம் பா.ஜ.க. தலைவர்கள்மத்தியிலேயே நிலவுகிறது. எனவே, தேர்தலின்போது கட்சிக்குப் பலம் சேர்க்க நடிகர் ரஜினிகாந்த்தை பிரசாரத்திற்குஅழைக்கலாம் என்ற முடிவில் ரஜினியின் நண்பர் சோ மூலம் முயற்சி நடைபெறுகிறது.

சோவும் கடந்த 2 நாட்களாக ரஜினியைச் சந்தித்து இது குறித்து பேசி வருவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில்காஞ்சி சங்கராச்சாரியார் மூலமும் ரஜினிக்கு நெருக்குதல் தரப்படலாம் என்று தெரிகிறது.

ஆனால், இதை ரஜினி ஏற்பாரா என்று தெரியவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil