»   »  ராமேஸ்வரம் கோவிலுக்கு ரஜினி தரும் வலம்புரி சங்குகள்

ராமேஸ்வரம் கோவிலுக்கு ரஜினி தரும் வலம்புரி சங்குகள்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு 1008 வலம்புரி சங்குகளை நன்கொடையாக கொடுக்கநடிகர் ரஜினிகாந்த் ஒப்புக் கொண்டுள்ளதாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினத்தன்று நடிகர் ரஜினிகாந்த் ராமேஸ்வரத்திற்கு திடீர் பயணம்மேற்கொண்டார்.அங்குள்ள ராமநாதசுவாமி கோவிலுக்குச் சென்ற அவர் சிறப்பு அர்ச்சனைகளை செய்தார்.

அப்போது பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த வலம்புரி சங்குகள் மிகவும் தேய்ந்த நிலையிலும், அபிஷேகம்செய்வதற்கு லாயக்கில்லாத நிலையிலும் காணப்பட்டதைப் பார்த்தார் ரஜினி. அப்போது கோவில் அர்ச்சர்களும்இந்த சங்குகளை வைத்து அபிஷேகம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ரூ. 2 லட்சம் செலவில் 1008 சங்குகளை தான் நன்கொடையாக தருவதாக கோவில் நிர்வாகத்திடம்நடிகர் ரஜினிகாந்த் உறுதியளித்தார். இத் தகவலை ராமேஸ்வரம் பகுதி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மாப்பிச்சைமற்றும் நாகரத்தினம் ஆகியோர் தெரிவித்தனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil