»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருட்டு வி.சி.டிக்கு எதிராக மிகக் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என நடிகர் ரஜினி காந்த்கூறியுள்ளார்.


இரங்கல் கூட்டத்துக்கு வரும் ரஜினி
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பட அதிபர் ஜி.விக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில்இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் பேசிய தயாரிப்பாளர்கள் திருட்டு வி.சி.டி தான் சினிமா தொழிலையே அழித்துவருவதாகவும் ஜி.வியின் மறைவுக்கும் அது தான் காரணம் என்று குற்றம் சாட்டினர்.

இதன் பின்னர் ரஜினி பேசியதாவது:

வாழும்போது ஒருவரைப் பற்றி பேசுவதை விட இறந்த பிறகும் பேச வேண்டும். அதற்குப் பெயர் தான் சரித்திரம்.ஜி.வி. ஒரு சரித்திரம். இன்னும் 50 வருடம் ஆனாலும் ஜி.வியை மறக்க முடியாது. அந்தக் காலத்தில்பி.யூ.சின்னப்பா வைரத்தைத் தின்று தற்கொலை செய்ததாக சொல்வார்கள்.

கொன்னப்ப பாகவதர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்தாராம். அவர்கள் எல்லாம் யாருக்கும் ஏதும் செய்ததுஇல்லையா? அவர்களால் பலனடைந்தவர்களுக்கு நெஞ்சமே கிடையாதா?.

ரஜினி, ஜி.விக்கு நண்பராக இருந்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லையா என்று கேட்கும்போது வெட்கமாகஇருக்கிறது. அவமானமாக இருக்கிறது. ஜி.வி. யாரிடமும் தனது கஷ்டத்தைச் சொல்ல மாட்டார். எப்படி இருக்கீங்கஎன்று கேட்டால், பென்டாஸ்டிக் என்று ஆங்கிலத்தில் பதில் சொல்வார்.


சினிமா தயாரிப்பாளர்களுடன் ரஜினி
அவர் இறந்துவிட்டார் என்று சொன்னதும் ஓடிப் போய் பார்த்தேன். நான் அதை பார்த்திருக்கக் கூடாது. அவர்தூக்கு மாட்டிய மின் விசிறி என் கண்களுக்கு சினிமா ரீல் மாதிரி தெரிந்தது. தூக்கு போட்ட அங்கவஸ்திரம்சினிமா பிலிம் மாதிரி இருந்தது. அவர் மண்டியிட்டிருந்த நிலையைப் பார்க்கும்போது இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்று தோன்றியது.

ஒரு மாதத்துக்கு முன் ஜி.வியின் உறவினர் சுரேஷிடம் ஜி.வி எப்படி இருக்கிறார் என்று விசாரித்தேன்.கொடக்கானல் பங்களாவை மற்றும் நிலங்களை விற்க முயற்சி நடப்பதாக சொன்னார். ஜி.வி. தன் மகனின் திருமணபத்திரிக்கையைக் கொண்டு வந்தபோது கூட கேட்டேன். தனது கஷ்டத்தைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.

கல்யாணத்துக்கு வரணும்னு மட்டும் சொன்னார். அவர் தயாரித்த தமிழன், சொக்கத் தங்கம் இரண்டும் கெட்டபடங்களா?.. நல்ல படங்கள் தானே? பின்னர் ஏன் தூள் படம் மாதிரி ஓடவில்லை. திருட்டு விசிடி ஒரு காரணம்.

இப்போதெல்லாம் திருட்டு விசிடியை பைகளில் போட்டுக் கொண்டு வந்து விற்கிறார்கள். திருட்டு விசிடிக்குஎதிராக மிகக் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.


ஜி.வியின் உடல்
நிறைய தயாரிப்பாளர்களை பார்க்கவேமுடியவில்லை. படம் தயாரிப்பதையே நிறுத்திவிட்டார்கள்.

இதோ முன் வரிசையில் இருக்கும் தயாரிப்பாளர் பாபுவிடம் காளி படத்துக்காக கை நீட்டி காசு வாங்கினேன். பஞ்சுஅருணாச்சலம் சார் நிலைமை என்ன. என்னால் முடிந்த உதவிகளை இவர்களுக்கு செய்துள்ளேன்.

பாபா படத்தை நான் தயாரித்து விற்றேன். அந்தப் படத்தால் வினியோகஸ்தர்கள் அடைந்த நஷ்டத்துக்குபணத்தைத் திருப்பித் தந்தேன்.

இறைவா, நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று.. பகைவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.

புதுசா படம் எடுக்க வர்ற தயாரிப்பாளர்களுக்கு நான் சொல்வது இது தான். படத் தயாரிப்புப் பணத்தில் 10சதவீதத்தை மனைவி, குழந்தைகள் பெயரில் முதலீடு செய்து வைத்துவிடுங்கள். ஒரு கிரவுண்டு நிலத்தை வாங்கிப்போடுங்கள்.

சினிமா நம்மைக் காப்பாற்றும் என்று நம்பாதீர்கள். ஜி.வி. சார் நிலைமை இன்னொருவருக்கு வரக் கூடாது.நாலைந்து பேர் உட்கார்ந்து பேசி, பணம் தந்தவர்களை சமாதானப்படுத்தி, சில பேர் உயிர்களை காப்பாற்றுங்கள்.என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்.

திருட்டு விசிடியைத் தடுக்க கடுமையான சட்டம் வேண்டும். இது முதல்வருக்கும் தெரியும். சரியான நேரத்தில்அவர் கடுமையான சட்டம் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

  • மதுரை கந்து வட்டிக் கும்பலின் மிரட்டல் காரணம்?
  • நெப்போலியனிடம் உதவி கேட்ட ஜி.வி.!
  • மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலை

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil