»   »  ரஜினி ஒன்றும் பெரிய சூப்பர் ஸ்டார் கிடையாது: சொல்கிறார் நடிகர் நானா படேகர்

ரஜினி ஒன்றும் பெரிய சூப்பர் ஸ்டார் கிடையாது: சொல்கிறார் நடிகர் நானா படேகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: என்னது, ரஜினிகாந்த் பெரிய ஸ்டார் இல்லை என பாலிவுட் நடிகர் நானா படேகர் தெரிவித்தாரா என்று கொந்தளிக்க வேண்டாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படம் வசூலை அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் தெரியாதவர்கள் கூட நெருப்புடா என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகர் நானா படேகர் ரஜினி ஒன்றும் பெரிய ஸ்டார் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நானாவிடம் கேட்கப்பட்டது.

ரஜினி

ரஜினி

ரஜினிகாந்த் பற்றி என்ன நினைக்கிறீர்கள், நாட்டிலேயே அவர் தான் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் என்று நீங்கள் உணர்கிறீர்களா என்று செய்தியாளர்கள் நானா படேகரிடம் கேட்டனர்.

நானா

நானா

படம் தான் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். கதை நன்றாக இருந்தால் புதுமுகங்களை நடிக்க வைத்தாலும் படம் ஹிட்டாகிவிடும். நடிகர்களுக்காக படம் எடுத்து வெளியிட்டால் அது 2, 3 நாட்கள் தான் ஓடும் என்று நானா படேகர் தெரிவித்துள்ளார்.

யார் நடித்தாலும்

யார் நடித்தாலும்

கதை சரியில்லை என்றால் அந்த படத்தில் எவ்வளவு பெரிய ஸ்டார் நடித்தாலும் அது ஓடாது என்று நானா படேகர் கூறியுள்ளார். அவர் சொல்வதும் உண்மை தானே.

நானா படேகர்

நானா படேகர்

நானா படகேர் எளிமையான வாழ்வு வாழ்வதற்கு பெயர் போனவர். தனது வருமானத்தின் பெரும் பகுதியை வறுமையால் வாடும் விவசாயிகளுக்கு அளித்து வருகிறார். மேலும் வறட்சியால் பயிர்கள் வாடி தானும் வாடும் விவசாயிகளுக்கு உதவுமாறு அவர் மக்களையும் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actor Nana Patekar thinks that Rajinikanth is not the biggest superstar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil