பா.ரஞ்சித் அடுத்து இயக்க போவது யாரை...அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்
சென்னை : அட்டகத்தி படத்தின் மூலம் டைரக்டரான பா.ரஞ்சித், சமீபத்தில் தான் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கி முடித்தார். இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. பல பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். கமல் சமீபத்தில் சார்பட்டா பரம்பரை டீமை நேரில் அழைத்து பாராட்டினார்.
சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு கூர்ந்து கவனிக்கப்படும் டைரக்டர்களில் ஒருவராகி விட்டார் பா.ரஞ்சித். இதனால் அவர் அடுத்து இயக்க போகும் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

ரஜினியை மீண்டும் இயக்குகிறாரா
சமீபத்தில் பா.ரஞ்சித், ரஜினியை, டப்பிங் ஸ்டூடியோ ஒன்றில் சந்தித்த ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரஞ்சித் மீண்டும் ரஜினியை வைத்து படம் இயக்க போகிறார் என தகவல் பரவியது. பா.ரஞ்சித் ஏற்கனவே ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்தடுத்து இயக்கினார். இந்த இரு படங்களும் பல்வேறு சமூக பிரச்சனைகளை பேசுவதாக அமைந்தது. இதனால் மீண்டும் ரஜினியை இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ரஜினியை காலி செய்தாரா ரஞ்சித்
அதே சமயம் காலா படம் ரிலீசான போது பா.ரஞ்சித்திற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. பா.ரஞ்சித் தனது சாதிய கொள்கைகளை காட்டுவதற்காக படம் எடுக்கிறார் என்றும், இதில் ரஜினியை நடிக்க வைத்து அவரின் சூப்பர் ஸ்டார் இமேஜை காலி செய்து விட்டார் என ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகை சேர்ந்த பலரும் பேசினர். இது போன்ற நெகடிவ் விமர்சனங்களால் இனி பா.ரஞ்சித் படங்களிலும், இதே போன்ற சாதிய பிரச்சனை பேசும் கதைகளிலும் நடிக்க வேண்டாம் என ரஜினி முடிவு எடுத்து விட்டதாக கூறப்பட்டது.

சந்திப்பின் பின்னணி இதுவா
ஆனால் அந்த சந்திப்பின் பின்னணி குறித்து விசாரித்த போது, ரஜினி தற்போது நடித்து வரும் அண்ணாத்த படத்திற்காக டப்பிங் பேச வந்த ஸ்டூடியோவின் கீழ்தளத்தில் தான் விஐபி.,க்களுக்கான ப்ரிவ்யூ திரையிடப்படும் தியேட்டர் உள்ளதாம். அங்கு சார்பட்டா பரம்பரை படத்தை சில விஐபி.,க்களுக்கு திரையிட்டு காட்ட வந்த பா.ரஞ்சித், அங்க ரஜினி டப்பிங் பேச வந்திருந்ததை அறிந்து மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார் என கூறப்பட்டது.

தலைவர் 169 டைரக்டர் யார்
அதே சமயம் ரஜினி அடுத்தபடியாக நடிக்க உள்ள தலைவர் 169 படத்தை இயக்க கார்த்திக் சுப்பராஜ், தேசிங்கு பெரியசாமி உள்ளிட்ட பல டைரக்டர்களின் பெயர்கள் அடிபடுகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட தகவலும் வதந்தி என சமீபத்தில் ஒரு தகவல் வெளியிடப்பட்டது.

விக்ரமை தான் இயக்க போகிறாரா
இதற்கிடையில் பா.ரஞ்சித் அடுத்தபடியாக விக்ரமை இயக்க போவதாக மற்றொரு தகவலும் பரவி வருகிறது. விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், கோப்ரா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சியான் 60 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் இந்த படங்களின் ஷுட்டிங்கில் ரொம்பவே பிஸியாக இருந்து வருகிறாராம் விக்ரம். அதிலும் இவர் முதல் முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் சியான் 60 அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது.

ரஜினியால் தள்ளிப் போன படம்
கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கிய போதே, விக்ரமை வைத்து ஒரு படம் இயக்க பா.ரஞ்சித் திட்டமிட்டிருந்தார். அந்த படத்திற்கு கதை கூட தயார் செய்து வைத்திருந்தாராம். ஆனால் அதற்குள் கபாலி, காலா என அடுத்தடுத்து ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் விக்ரம் உடனான படத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என பா.ரஞ்சித் ஒத்திவைத்து விட்டாராம். காலா படத்திற்கு பிறகாவது விக்ரம் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

2022 ல் ஷுட்டிங்கா
அதற்குள் விக்ரமும் பல்வேறு படங்களில் பிஸியானதாலும், சார்பட்டா பரம்பரை கதை பா.ரஞ்சித்தை மிகவும் ஈர்த்ததாலும் அதனை உடனடியாக இயக்க முடிவு செய்து, ஆர்யாவை ஹீரோவாக வைத்து இந்த படத்தை இயக்கி உள்ளார். தற்போது அடுத்தபடியாக விக்ரமை இயக்கும் வேலைகளில் பா.ரஞ்சித் இறங்கி விட்டதாகவும், விக்ரம் தற்போது நடிக்கும் படங்களை முடித்த பிறகு 2022 ம் ஆண்டின் மத்தியில் இந்த புதிய படத்தின் ஷுட்டிங்கை துவக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கலாம் என கூறப்படுகிறது.

அடுத்தது ரொமான்டிக் படமா
தனது வழக்கமான பாணியான சமூக பிரச்சனை, சாதி பிரச்சனை போன்ற கதைகள் இல்லாமல், சாஃப்டான ரொமான்டிக் படம் ஒன்றை இயக்கவும் பா.ரஞ்சித் யோசித்து வருகிறாராம். நட்சத்திரம் நகர்கிறது என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, விக்ரம் உடனான படத்திற்கு முன் ரஞ்சித் இயக்கி முடிக்கலாம் என கூறப்படுகிறது.
Recommended Video

அறிவிப்பு எப்போது
எப்படி இருந்தாலும் விக்ரமை வைத்து பா.ரஞ்சித் ஒரு படம் இயக்க போவது கிட்டதட்ட உறுதியாகி விட்டதாம். இது பற்றிய அறிவிப்பிற்காக ஒட்டுமொத்த திரையுலகமே காத்திருக்கிறது. பா.ரஞ்சித் அடுத்து யாரை இயக்க போகிறார் என்ற அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











