»   »  ரஜினி, ரஞ்சித் மறுகூட்டணியால் அந்த செய்தி அடங்கிடுச்சு, ஆனால்...

ரஜினி, ரஞ்சித் மறுகூட்டணியால் அந்த செய்தி அடங்கிடுச்சு, ஆனால்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் பா. ரஞ்சித் மீண்டும் இணையும் படம் கபாலி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டானாக நடித்த கபாலி படம் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது. கபாலி ரிலீஸாகும் முன்பே பல பேர் கபாலி காய்ச்சல் பிடித்து திரிந்தார்கள். ரஜினியை வித்தியாசமாக பார்த்த மகிழ்ச்சி ரசிகர்களுக்கு என்றால், தான் கூற நினைத்த கருத்தை எல்லாம் சூப்பர் ஸ்டார் மூலம் மக்களிடம் கொண்டு சென்ற மகிழ்ச்சி ரஞ்சித்துக்கு.

Rajini, Pa. Ranjith to team up again for Kabali sequel?

இந்நிலையில் ரஜினி ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் 2.0 படத்தை முடித்த பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார். படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

கபாலிடா கூட்டணி மீண்டும் ஒன்று சேர்வதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரஞ்சித் ரஜினியை வைத்து மீண்டும் இயக்கும் படம் கபாலியின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரஜினி ஷங்கரின் படத்தை முடித்த பிறகு சித்திக்கின் பாஸ்கர் தி ராஸ்கல் மலையாள படத்தின தமிழ் ரீமேக்கில் நடிப்பார் என்று கூறப்பட்டது. தற்போது அவர் ரஞ்சித் படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது.

English summary
Superstar Rajinikanth's fans are wondering whether thalaivar and Ranjith are planning to do Kabali sequel.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil