»   »  ஜீவா படத்துக்கு போக்கிரி ராஜா தலைப்பு!- அனுமதி அளித்தார் ரஜினி

ஜீவா படத்துக்கு போக்கிரி ராஜா தலைப்பு!- அனுமதி அளித்தார் ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது போக்கிரி ராஜா படத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ள ஜீவாவுக்கு அனுமதி அளித்துள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்தின் பழைய படப் பெயர்களை தங்கள் படங்களுக்கு சூட்டிக்கொள்ள கதாநாயகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

பில்லா

பில்லா

ஏற்கனவே ரஜினியின் ‘பில்லா' படப்பெயர் அஜீத் படத்துக்கு சூட்டப்பட்டது. ரஜினியின் பில்லாவைத்தான் அஜீத்தை வைத்து ரீமேக் செய்தனர். ‘பில்லா-2' படத்திலும் அவர் நடித்தார்.

படிக்காதவன்

படிக்காதவன்

இதுபோல், ரஜினியின் படிக்காதவன், மாப்பிள்ளை படத்தலைப்புகள் தனுஷ் படத்துக்கு வைக்கப்பட்டது.

முரட்டுக்காளை

முரட்டுக்காளை

சுந்தர் சி தன் பங்குக்கு முரட்டுக் காளை, தீ போன்ற ரஜினியின் படத் தலைப்புகளைப் பயன்படுத்திக் கொண்டார்.

நான் மகான் அல்ல

நான் மகான் அல்ல

‘நான் மகான் அல்ல' என்ற பெயரை கார்த்தி தனது படத்துக்குப் பயன்படுத்தினார். அடுத்து காளி என்ற தலைப்பையும் கையில் வைத்துள்ளார்.

பாயும் புலி

பாயும் புலி

ரஜினியின் நான் சிகப்பு மனிதன் படத் தலைப்பை முதலில் விஷால் பயன்படுத்தினார். இப்போது பாயும்புலி தலைப்பில் படம் நடித்து முடித்துள்ளார். இந்த படம் நாளை வெளியாகிறது.

போக்கிரி ராஜா

போக்கிரி ராஜா

இந்த நிலையில், ஜீவாவும் தனது படத்துக்கு ரஜினியின் ‘போக்கிரி ராஜா' தலைப்பைப் பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளார்.

‘போக்கிரிராஜா' படம் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்து 1982-ல் வெளியானது. ஏவி. எம். நிறுவனம் தயாரித்தது.

ரஜினி அனுமதி

ரஜினி அனுமதி

இந்தத் தலைப்பைக் கேட்டு ஜீவா உள்ளிட்ட படக்குழுவினர் ஏவி.எம். நிறுவனத்தை அணுகினர். ரஜினிக்கு ஆட்சேபணை இல்லையென்றால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர். உடனே ரஜினியிடம் அனுமதி கேட்டனர். அவரும் பெருந்தன்மையோடு அனுமதி அளித்ததாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஜீவா ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.

English summary
Rajinikanth has gave permission to Jiiva and his team to use his 1982's blockbuster Pokkiri Raja title.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil