»   »  '2.ஓ'-க்கு முன்பே வெளியாகுமா காலா... கசியும் தகவல்!

'2.ஓ'-க்கு முன்பே வெளியாகுமா காலா... கசியும் தகவல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
2.O : அத்தனை கோடி செலவு பண்ணியும் இதை ஒண்ணும் பண்ண முடியலையே...வீடியோ

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கும் 'காலா' படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் எனக் கூறப்பட்டது.

அதற்கு முன்பு வரும் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் ஏப்ரலில் ஷங்கர் இயக்கியிருக்கும் '2.ஓ' ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், '2.ஓ' படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் 'காலா' படத்தை முதலில் ரிலீஸ் செய்யத் திட்டமிடுவதாக தகவல் கசிந்துள்ளது.

அரசியலில் ரஜினி

அரசியலில் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்க தீவிரம் காட்டி வருகிறார். தன் மன்றத்தை பலப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதேசமயம், ரஜினி நடித்து முடித்துள்ள '2.O' மற்றும் 'காலா' பட வேலைகளும் மும்முரமாய் நடந்து வருகின்றன.

2.O ரிலீஸ் தாமதம்

2.O ரிலீஸ் தாமதம்

இதில் ஷங்கர் இயக்கத்தில், உருவாகியுள்ள '2.O' படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் பலமாதங்களாக நடந்து வருகின்றன. முதலில் இதை திரைக்கு கொண்டு வரலாம் என்று ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் நினைத்தனர். ஆனால் பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை.

ஏப்ரல் ரிலீஸ்?

ஏப்ரல் ரிலீஸ்?

ஷங்கர் பிரம்மாண்டமாக இயக்கி உள்ள 2.0 படம் ஏப்ரல் 14 ரிலீசாகும் எனக் கூறப்பட்ட நிலையில் கிராஃபிக்ஸ் பணிகள் இன்னும் முடியவில்லையாம். சந்திரலேகா படம் போல் '2.ஓ' நிச்சயம் அனைவராலும் பேசப்படும் படமாக அமையும். அதற்காக காலம் தாழ்த்தினால் தப்பில்லை என நினைக்கிறார்களாம்.

முதலில் காலா

முதலில் காலா

ஆகையால் அதன்பின் ரஞ்சித் இயக்கத்தில் தான் நடித்த 'காலா' படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளனர். 'காலா' படத்தின் 95% பணிகள் முடிந்துள்ளதால் 'காலா' படத்தை முதலில் ரிலீஸ் செய்யுமாறு ரஜினி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.

English summary
Rajinikanth has ordered the release of the film 'kaala' before '2.O' release. Becuase, '2.O' graphics work not yet completed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil